
இந்தியாவில் சோலிஸ் மற்றும் ஜப்பானின் யன்மார் இணைந்து இந்திய சந்தையில் புதிய JP 975 டிராக்டரை 2WD மற்றும் 4WD என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 8.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது.
ஜப்பானியத் தொழில்நுட்பத்தின் துல்லியத்தையும், இந்திய விவசாய நிலங்களின்த் தேவையையும் ஒருங்கே கொண்டுள்ள புதிய JP975 டிராக்டரில் 2100cc டீசல் என்ஜின் 4 சிலிண்டருடன் கொடுக்கப்பட்டு 48 hp பவர் மற்றும் 205Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் பல்வேறு விவசாய பணிகளுக்கு ஏற்றதாக 15FR+5R டிரான்ஸ்மிஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலுக்கு 15F + 5R எபிசைக்ளிக் டிரான்ஸ்மிஷனை உருவாக்கியுள்ளதாகவும், மென்மையான கையாளுதலுக்காக பக்கவாட்டு ஷிப்ட் கியர்களைக் கொண்டதாகவும் சோலிஸ் கூறுகிறது.
இது சந்தையில் உள்ள மஹிந்திரா 575, ஜான் டியர் 5045D போன்ற மற்ற போட்டியாளர்களை விட 10 சதவீதம் கூடுதலான டார்க் உள்ளதால் இதனால், உழவுப் பணிகள் மற்றும் கனரக சுமைகளை இழுப்பது விவசாயிகளுக்கு மிகவும் எளிதாகிறது.
லேடர் டைப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, சுமார் ஹைட்ராலிக் லிஃபடில் 2000 கிலோ எடையைத் தூக்கும் திறன் கொண்டதால், நவீன விவசாயக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ள JP 975 டிராக்டரில் 2 RMB கலப்பை, 6–7 அடி ரோட்டவேட்டர், டிஸ்க் ஹாரோ, 11 டைன் கலப்பை, 7 அடி விதை தூவும் வசதி, மற்றும் வைக்கோல் சேகரிப்பு சார்ந்த பணிகளுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.
- 2WD கொண்ட மாடல் ₹ 7.00 லட்சம் – ₹ 7.50 லட்சம்
- 4WD கொண்ட மாடல் ₹ 8.10 லட்சம் – ₹ 8.60 Lakhs

