Automobile Tamilan

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

access 125

125சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற சுசூகி நிறுவனத்தின் அக்சஸ் ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் சராசரியாக 51 கிமீ வரை கிடைக்கின்றது.

மிகவும் தரமான எஞ்சின் அதிகப்படியான சத்தமில்லாமல் சிறப்பான முறையில் ரிஃபைன்மன்ட் செய்துள்ள சுசூகி அக்சஸ் உண்மையில் ஓட்டும் பொழுது சீரான வேகம் மற்றும் அதிகப்படியான பிரேக்கிங் இல்லாத நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது லிட்டருக்கு 54 கிமீ வரை கிடைக்கின்றது.

மிகுந்த போக்குவரத்து நெரிசல், சிட்டி பயன்பாட்டில் அதிகப்படியான பிரேக் உள்ளிட்ட காரணத்தால் லிட்டருக்கு 47 முதல் 48 கிமீ வரை கிடைக்கின்றது.

மைலேஜ் சோதனை அதிகப்படியான வேகம் இல்லாமல் சீரான வேகம், முறையான டயர் பிரெஷர், ஓட்டுநரின் அனுபவம் உள்ளிட்டவை கொண்டே கிடைக்கின்றது.

சிறப்பான மைலேஜ் பெற முக்கியமாக கவனிக்க வேண்டியவை..!

 

Exit mobile version