Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

By MR.Durai
Last updated: 4,June 2025
Share
SHARE

tata harrier.ev stealth

65KWh மற்றும் 75Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் டாடா ஹாரியர்.EV எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் டாப் மாடலில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 120Kw DC விரைவு சார்ஜர் ஆதரவினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் BNCAP மற்றும் GNCAP 5 நட்சத்திர ஆதரவுக்கு 7 ஏர்பேக்குகள் (6 ஸ்டாண்டர்டு மற்றும் கூடுதல் முழங்கால் பகுதிக்கான ஏர்பேக்) மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் லெவல் 2 ADAS ஆதரவுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்டுடன் அமைந்துள்ளது.

65kwh பேட்டரி ஆப்ஷனை பற்றி முழுவிபரங்களை வெளியிடாத நிலையில் சில அடிப்படையான தகவல்களை 75Kwh பேட்டரி பற்றி தகவலை வெளியிட்டுருந்த நிலையில் பின் வருமாறு;-,

  • முன்புற மோட்டார் 158 PS (116 kW) சக்தியையும், பின்புற மோட்டார் 238 PS (175 kW) பவரை வெளிப்படுத்துகின்று.
  • 6.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டுகின்றது.
  • QWD கொண்ட மாடல் 504 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், கூடுதலாக அமைந்துள்ள பூஸ்ட் மோடு மூலம் 540 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
  • 627 கிமீ ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் C75 முறைப்படி உண்மையான ரேஞ்ச் 480 கிமீ முதல் 505 கிமீ வரை வழங்கலாம்.
  • 7.2kW AC சார்ஜர் ஹாரியர் EV காரினை 10.7 மணி நேரத்தில் 10-100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் 120kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பேட்டரியை 25 நிமிடங்களில் 20-80 சதவீதமாக எட்டுகின்றது.

tata harrier.ev dashboard

மற்ற வசதிகளில் பல்வேறு நவீன பெற்ற இன்டீரியர் உலகின் முதல் 14.53 அங்குல ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் சாம்சங் நியோ QLED டிஸ்பிளே வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

ஒளிரும் வகையிலான டாடா லோகோ பெற்ற 4 ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலுடன் பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், டால்பி அட்மாஸ் 5.1 உடன் 10 பிளாக் ஸ்பீக்கர் JBL, வாகனத்திலிருந்து ஏற்றுதல் (V2L) மற்றும் வாகனத்திலிருந்து வாகனத்திற்கு (V2V) செயல்பாடு கொண்டுள்ளது.

ஆஃப் ரோடு சாகசங்களில் 540 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மூலம் டிரான்ஸ்பரன்ட் மோடு (Transparent Mode) மூலம் வாகனத்தின் அடியில் உள்ளவற்றையும் அறிந்து கொள்ளலாம். 502 லிட்டர் பூட் ஸ்பேஸ், 999 லிட்டர் வரை விரிவாக்கலாம். முன்புறத்தில் 35 லிட்டர் ஃபிரன்க் ஸ்டோரேஜ் உள்ளது.

Harrier.EV காரில் நைனிடால் நாக்டர்ன், எம்பவர்டு ஆக்சைடு, ப்ரிஸ்டைன் ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய வண்ணங்களிலும், கூடுதலாக ஸ்டெல்த் எடிசனும் மற்றும்  Normal, Grass/Snow, Mud/Gravel, Sand, Rock Crawl, Custom என 6 விதமான டெர்ரையின் மோடுகள் உள்ளன.

ஜூலை 2ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் டாடா ஹாரியர்.இவி விலை பட்டியல் வரும் நாட்களில் வெளியாகும்.

tata harrier.ev dashboard new 1 tata harrier.ev featuers 1

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:Tata Harrier EV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved