தீபாவளிக்கு முன்னதாக ஸ்பீடு 400, ஸ்பீடு T4 என்ற இரண்டு முக்கிய மாடல்களை வாங்குபவர்களுக்காக விலையை தற்காலிகமாக டிரையம்ப் நிறுவனம் குறைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
தற்பொழுது 350சிசிக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஜாஜ் ஆட்டோ தனது டிரையம்ப் ஸ்பீடு 400 வரிசை, பஜாஜ் பல்சர் என்எஸ் 400 மற்றும் கேடிஎம் 390 வரை உள்ள பைக்குளுக்கு விலை உயர்த்தாமல் தொடர்ந்து முந்தைய விலையில் விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில், டிரையம்ப் வெளியிட்ட அறிக்கையின் மூலம் ஸ்பீடூ 400 பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.2,33,754 ( முன்பு ரூ.2,50,551லிருந்து குறைவு) என்ற புதிய விலையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஸ்பீட் T4 மாடல் ரூ.1,92,539 ( முன்பு ரூ.2,06,738 இலிருந்து குறைவு) விலையில் கிடைக்கிறது. இந்த விலை திருத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாடல்களில் முறையே ரூ.16,797 முதல் ரூ.14,199 வரை சலுகை அளிக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் புரோ பைக்கிங் தலைவர் மாணிக் நங்கியா கூறுகையில், “ஸ்பீடு 400 மற்றும் ஸ்பீடு T4 ஆகியவை செயல்திறன், வடிவமைப்பு மற்றும் அணுகல் ஆகியவற்றில் அளவுகோல்களை அமைத்துள்ளன. தாக்கத்தை உள்வாங்கி விலைக் குறைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ இந்திய சந்தை மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மீது தங்கள் கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, ஸ்பீடு வரிசை பைக்குகள் தொடர்ந்து ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்குவதை உறுதி செய்கிறது. ஜிஎஸ்டி திருத்தத்திற்கு முன்பு தேவையில் வலுவான எழுச்சியுடன், நிதியாண்டு 23–24 முதல் மாதாந்திர அளவுகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன, இது ட்ரையம்ப் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் தெளிவான பிரதிபலிப்பாகும். இந்த வேகத்தை எதிர்காலத்தில் தக்கவைத்துக்கொள்வோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.” என குறிப்பிட்டார்.