எக்ஸைட் இன்டஸ்ட்ரீசின் முதல் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா ”எக்ஸைட் நியோ”அறிமுகம்

0

exide neo

நாட்டின் மிகப்பெரிய மின்கலம் தயாரிப்பாளரான எக்ஸைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எக்ஸைட் நியோ என்ற பெயரில் தனது முதல் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோவின் பெரும்பாலான பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து தயாரித்துள்ளது.

Google News

நாட்டின் மிகப்பெரிய வாகன பேட்டரி தயாரிப்பாளரான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இ-ரிக்‌ஷாக்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய நியோ ரிக்‌ஷா முதற்கட்டமாக மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தேசிய தலைநகர் பகுதி போன்றவற்றில் விற்பனை செய்வதுடன் படிபடிப்படியாக நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

நியோ எலெக்ட்ரிக் ஆட்டோவின் பெரும்பாலான பாகங்கள் பேட்டரியை தவிர சீனாவிலிருந்து பெறப்பட்டவை என்றாலும் 15-20 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் ஃபேக்ட்ரி மதிப்பின் படி 40 % பேட்டரி மதிப்பாகும். இந்த வாகனத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ள பேட்டரி இந்நிறுவனத்தின் முதல் பிராண்டேட் பேட்டரி பிரத்தியேகமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இ-ரிக்‌ஷா ஆபரேட்டர்களுடன் பணிபுரிந்த நாங்கள், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மற்றும் பல்வேறு வசதிகளை வழங்கவும், இந்திய நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமான வாகனத்தை வடிவமைக்க அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடலில் ரியர் வியூ கேமரா, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்டேஷன் பேனல் மற்றும் ஏபிஎஸ் கூரை போன்ற முக்கியமான பாதுகாப்பு மேம்பாட்டு அம்சங்கள் மற்றும் உயர் தரமான ஸ்டீல் வலுவூட்டப்பட்ட  அம்சங்கள் எக்ஸைட் நியோவில் இணைக்கப்பட்டுள்ளன என இந்நிறுவன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிங்க – கைனடிக் சேஃபர் ஸ்டார் மின் ஆட்டோ விபரம்