பிஎஸ்-6 மாருதி சூப்பர் கேரி சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

0

maruti super carry cng

மாருதி சுசூகி விற்பனை செய்து வருகின்ற இலகுரக வர்த்தக வாகனம் சூப்பர் கேரி இப்போது பிஎஸ் 6 பெட்ரோல் இன்ஜின் சிஎன்ஜி ஆதரவுடன் ரூ.5.07 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரு எரிபொருளிலும் அதாவது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் திறன் பெற்ற மாருதியின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிஎன்ஜி எரிபொருளில் 65.21 ஹெச்பி பவர், 85 என்எம் டார்க், பெட்ரோல் முறையில் அதிகபட்சமாக 73.42 ஹெச்பி பவர், 98 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் அமைந்துள்ளது.

5 லிட்டர் பெட்ரோல் டேங்க், 70 லிட்டர் கொள்ளளவு பெற்ற சிஎன்ஜி எரிபொருள் டேங்க் கொண்டுள்ள சூப்பர் கேரி மினி டிரக்கினை முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு டீசல் என்ஜின் பெற்றதாக மாருதி சுசுகி வெளியிட்டிருந்தது. ஆனால் புதிய பிஎஸ்-6 நடைமுறைக்கு வந்தப் பின்னர் டீசல் என்ஜினை இந்நிறுவனம் கைவிட்டது.