350cc-க்கு குறைந்த இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பை தொடர்ந்து செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகா்ப் பண்டிகை காலத்தை முன்னிட்டு 6.47 லட்சம் இருசக்கர வாகனங்களை டீலர்களுக்கு டெலிவரி வழங்கி முதலிடத்தை பிடித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப், செப்டம்பர் 2025-இல் தனது விற்பனை ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. விற்பனனையில் 6,47,582 யூனிட்கள் வளர்ச்சியை பெற்று கடந்த ஆண்டின் செப் 2024 ஒப்பிடுகையில் (6,16,706) 5% வளர்ச்சி. உள்நாட்டுச் சந்தையில் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் மட்டுமன்றி, அதன் ஏற்றுமதி பிரிவிலும் புதிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டூ வீலர் தயாரிப்பாளரான ஹோண்டா விற்பனை 5% சரிவடைந்துள்ளது. 5,05,693 யூனிட் விற்பனை செய்து கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 5.72 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் அமோக வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், செப்டம்பர் 2025ல் 4,13,279 யூனிட்களை விநியோகம் செய்து 11.96 % வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,13,573 இரு சக்கர வாகனங்களை விநியோகம் செய்து 43.17 % வளர்ச்சி அடைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ 5.34 % சதவீத வளர்ச்சியும், சுசூகி இந்தியா நிறுவனம் 37.05 % வளர்ச்சி அடைந்துள்ளது.
Company | September 2025 | September 2024 | Growth y-o-y |
---|---|---|---|
Hero | 6,47,582 | 6,16,706 | 5% |
Honda | 5,05,693 | 5,36,391 | -5.72% |
TVS | 4,13,279 | 3,69,138 | 11.96% |
Bajaj | 2,73,188 | 2,59,333 | 5.34% |
Royal Enfield | 1,13,573 | 79,325 | 43.17% |
Suzuki | 1,05,886 | 77,263 | 37.05% |