உலகின் நெ.1 கார் தயாரிப்பாளர் – ஃபோக்ஸ்வேகன் குழுமம்

உலகின் முதன்மையான கார் தயாரிப்பாளராக ஜெர்மனி நாட்டின் ஃபோக்ஸ்வேகன் குழுமம் முன்னேறியுள்ளது. முதலிடத்தை டொயோட்டா நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு பிறகு இழந்துள்ளது. 2016ல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 10.31 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமம்

 

கடந்த 2011 முதல் ஜிஎம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த டொயோட்டா நிறுவனம் தற்பொழுது மிக குறைவான வித்தியாசத்தில் முதலிடத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் இழந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 10.31 மில்லியன் (1,03,12,400) கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது.இதே காலகட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 10.17 மில்லியன் (1,01,75,000) கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் ஜிஎம் நிறுவனம் தன்னுடைய விற்பனை எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் வெளியிட உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் விற்பனையை விட டொயோட்ட 0.2 சதவீத வளர்ச்சியும் ஃபோக்ஸ்வேகன் 3.8 சதவீத வள்ச்சியும் அடைந்துள்ளது. 2015யில் டொயோட்டா 10.15 மில்லியன் வாகனங்களும் , ஃபோக்ஸ்வேகன் 9.93 மில்லியன் கார்களும் மற்றும் ஜிஎம் 9.8 மில்லியன் வாகனங்களும் விற்பனை செய்திருந்தது.

Recommended For You