பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா அதிரடி ஆஃபர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 150சிசி FZ பைக்குகள் மற்றும் ஃபேஸினோ 125 ஃப்யூல்-இன்ஜெக்டட் ஹைபிரிட் டிரம் பிரேக் ஸ்கூட்டருக்கு அறிவித்துள்ளது. எஃப்.இசட் 15 பைக்குகளை இந்த குறிப்பிட்ட காலத்தில் வாங்குவோர் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெற முடியும். அத்துடன் பைக்கை ரூ.7,999 என்ற குறைந்த முன்தொகையில் முன்பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே:

Yamaha FZ 15 மாடல்களுக்கு  ரூ. 7000 வரை கேஷ்பேக் சலுகையுடன் குறைந்த டவுன் பேமெண்ட் ரூ. 7999 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த EMI ரூ. 1999 பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதம்.
ஃபேசினோ  125 Fi ஹைப்ரிட் டிரம் ரூ 1500 வரை கேஷ்பேக் சலுகையுடன் குறைந்த கட்டணம் ரூ. 3999 செலுத்தினால் போதும். குறைந்த EMI ரூ. 1999 பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதம்.

FZ & FZ-S என இரு மாடல்களிலும் 149சிசி ஏர்-கூல்டு, 2-வால்வு, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் 12.4 PS மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 13.3 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

This post was last modified on January 9, 2023 4:18 PM

Share