பரவசத்தில் ஆழ்த்தும் ராயல் என்ஃபீல்டு சுவாரஸ்யங்கள்..!

0

bs6 royal enfield bullet 350 es

ராயல் என்ஃபீல்டு என்றால் கம்பீரத்துக்கும் கர்ஜனைக்கும் என்றுமே குறைவில்லாத மோட்டார்சைக்கிள் நிறுவனமாக வலம் வருகின்ற ராஜநடை கொண்ட ராயல் என்ஃபீல்டு பிராண்டின் பூர்வீகம் இங்கிலாந்து நாடாகும். ஆனால் இந்தியாவுக்கு ராஜாவாகி போனது என்றால் மறுப்பதற்கு இல்லை..!

Google News

ராயல் என்ஃபீல்டு சுவாரஸ்யங்கள்

Royal Enfield Type Bullet 2

 • 1891 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அமைந்துள்ள ரெட்டிச் என்ற பகுதியில் தொடங்கப்பட்ட என்ஃபீலடு நிறுவனம் ஆரம்பத்தில் புல் வெட்டும் இயந்திரங்களை தயாரிக்க தொடங்கியது.
 • 1900 ஆம் ஆண்டு வரை குவாட்ரிசைக்கிள் , ட்ரைசைக்கிள் போன்ற வாகனங்களை தயாரித்து வந்தது.
 •  “மேட் லைக் ஏ கன்” என்ற கோஷத்தை நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்களில் கண்டிருப்பீர்கள், உண்மையில் இந்த கோஷம் என்ஃபீலடு நிறுவனத்தின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்ட 1893 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
 • 1901 ஆம் ஆண்டில் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டது.

Made Like a Gun

 • என்ஃபீல்டு புல்லட்களை மட்டுமல்ல கார்களையும் தயாரிக்க தொடங்கியது.
 • 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து ஆட்டோ ஷோவில் 2.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என்ஜினை பொருத்திய மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தியது.
 • அதன் பிறகு பல்வேறு சிறிய அளவிலான மோட்டார் சைக்கிள் உற்பத்தியை தொடங்கியிருந்தது.
 • 1914 ஆம் ஆண்டில் தொடங்கிய முதல் உலகயுத்தத்தில் அரசுகளுக்கு மோட்டார் சைக்கிள் அனுப்பி வைக்க தொடங்கியது.
 • 1916 ஆம் ஆண்டில் துப்பாக்கி பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம் செய்தது.
 • 1921 ஆம் ஆண்டில் 976 சிசி கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்யப்பட்டது.
 • 1931 ஆம் ஆண்டு புல்லட் என்ற பெயரில் சைக்கிளை அறிமுகம் செய்தது.
 • 1932 ஆம் ஆண்டில் முதன்முதலாக புல்லட் மோட்டார் சைக்கிள் வெளிவந்தது.
 • 1939 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இரண்டாம் உலகயுத்தத்தில் 125cc, 250cc, 350cc, 570cc ஆகிய சிசி கொண்ட பைக்குகளை பிரிட்டிஷ் படைக்கு வழங்கியது.
 • இந்த போரில் FLYING FLEA என்ற பைக்கை அறிமுகம் செய்தது.

Royal Enfield Flying Flea 1

 • 1951 ஆம் ஆண்டு உலகின் முதல் சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்தது.
 • 1953 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு லோகோ இன்றைக்கும் சிறிய மாறுதலுடன் புல்லட டேங்கில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் களமிறங்கிய ராயல் என்ஃபீல்டு

Royal Enfield Type Bullet 2

 • 1954 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு 800 புல்லட் ohv singles மோட்டார் சைக்கிள்கள் இந்திய எல்லை பாதுகாப்பு பணிக்காக வாங்கப்பட்டது.
 • 1955 ஆம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் நிறுவனம், இங்கிலாந்தின் என்ஃபீல்டு நிறுவனத்துடன் இணைந்து பாகங்களை தருவித்து ஒருங்கினைத்து விற்பனை செய்ய அனுமதியை பெற்றது.
 • அதன்பிறகு, புல்லட் 350 புல்லட் 500  மோட்டார் சைக்கிள்கள் இந்திய சந்தையை வந்தடைந்தது.
 • 1956 ஆம் ஆண்டில் திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் ராயல் என்ஃபீலடு நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் வருடத்தில் 163 பைக்குகளை தயாரித்தது.

royal enfield bullet 500 abs

அதன் பிறகு எவ்வாறு ராயல் என்ஃபீல்டு இந்தியா நிறுவனமாக மாறிய வரலாற்றை இங்க படிக்கல்லாம்..!

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan