Categories: TIPS

உங்கள் காரில் அவசியம் இருக்க வேண்டிய ஆக்சஸெரீகள்..! – Tips in Tamil

உங்கள் காரில் அவசியம் இருக்க வேண்டிய கூடுதல் துனைகருவிகளை எவை  ? ஏன் இருக்க வேண்டும் ? அவசியமான ஆக்சஸெரீகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.
குறைவான விலை கொண்ட பட்ஜெட் கார்களை தேர்ந்தேடுப்பதனால் அவசியமான பல ஆக்சஸெரீகள் இல்லாமல் இருக்கும். எனவே அவற்றை நம் தேவைக்கேற்ப இணைத்து கொள்ள இயலும்.
 
1. ரிமோட் லாக்கிங் சிஸ்டம்
 
ரிமோட் லாக்கிங் சிஸ்டம் அவசியமான துனைகருவிகளில் முதன்மையானதாகும். நடுத்தர கார்களில் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருந்தாலும், இன்னும் குறைவான விலை கொண்ட பேஸ் மாடல்களில் இந்த வசதி இல்லை.
 

ரூ.2500க்கு மிக சிறப்பான ரிமோட் லாக்கிங் சிஸ்டம் உள்ளது. இவை சென்ட்ரல் லாக்கிங் ஆப்ஷனுடன் இருப்பதனால் வாகனத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்யும்.

2. கார் கவர்

உங்கள் காரை மழை மற்றும் வெயில்களில் இருந்த காரினை பாதுகாக்க மிக எளிமையான வழிகளில் ஒன்றான கார் கவரை அவசியம் பயன்படுத்துங்கள். உங்கள் கார் மாடலுக்கு ஏற்ப விலை இருக்கும்.

3. பனி விளக்குகள்

அனைத்து பேஸ் வேரியண்டிலும் பனி விளக்குகள் இருக்காது என்பதனால் பனி காலங்களில் அதிக வெளிச்சம் மற்றும் தெளிவான சாலையை காண்பதற்க்கு மிக உதவிகரமான துனைகருவியாகும்.

4. ரியர் பார்க்கிங் சென்சார் அல்லது  பார்க்கிங் கேமரா

பின்புறமாக காரை நகர்த்தும்பொழுது பின்னாடி உள்ள இடத்தின் அளவு தெரியாது என்பதனால் ரியர் பார்க்கிங் சென்சார் அல்லது ரியர்  வியூ பார்க்கிங் கேமரா ஏதேனும் ஒன்றை தேர்ந்தேடுக்கலாம். இவற்றில் ரியர் பார்க்கிங் சென்சார் விலை குறைவாக இருக்கும். ஆனால் ரியர்  வியூ பார்க்கிங் கேமரா விலை கூடுதலாக இருக்கும்.

5. நேவிகேஷன் சிஸ்டம் 

நவீன காலத்தில் மிக சிறப்பான வழிகாட்டி அம்சமான நேவிகேஷன் நாம் செல்ல வேண்டிய இடத்திற்க்கு எவரின் துனையும் இல்லாமல் செல்ல மிகப்பெரிய உதவியாக உள்ளது. மேலும் அருகாமையில் உள்ள எரிபொருள்  நிலையங்கள், ஏடிஎம் , மருத்துவமனைகள், ஓட்டல்கள், மற்றும் பொழுதுபோக்கு மையங்களை  போன்றவற்றின் விபரத்தினை தெளிவாக பெற இயலும்.

6.  ஆடியோ சிஸ்டம்
ஆடியோ சிஸ்டம் அவசியம் என்பதனை யாரும் செல்ல தேவையில்லை.  மியூசிக் சிஸ்டங்கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரையிலான விலையில் பலதரப்பட ஆப்ஷன்களில் தொடுதிரை , ஸ்மார்ட்போன் தொடர்பு ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றது. உங்கள் தேவைக்கேற்ப பொருத்திகொள்ளுங்கள். பூளூடூத் , யூஎஸ்பி  மற்றும் ஆக்ஸ் தொடர்புகளை பெற்று கொள்ளலாம்.
7. இருக்கை கவர்

கார்களில் இருக்கை கவர்  (சீட் கவர் ) மிகவும் அவசியமான ஒன்றாகும். அழுக்குகளை தவிர்க்கவும் மிகவும் எளிதாக சுத்தம் செய்வதற்க்கும் கார் இருக்கைகளை கூடுதலாக சேர்ப்பது நலம் சேர்க்கும்.

8. மிதியடிகள்

மிதியடிகள் மன் மற்றும் தூசுகளை நீக்குவதற்க்கு எளிதாக இருக்கும். மேலும் ஒரு மேட்டுக்கு மேல் ஒட்டுநர் இருக்கை பகுதியில் பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் வேகம் மற்றும் பிரேக் திறனை பாதிக்கும்.

9.  டியூப்லஸ் டயர் பஞ்சர் கிட்

நெடுந்தொலைவு பயணிக்கும்பொழுது நெடுஞ்சாலைகளிலும் பஞ்சர் ஆகினாலும் நாம் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். துனை வீல் இருந்தாலும் பஞ்சர் கருவி இருப்பது நல்லது.

10. பெர்ஃப்யூம்

காரில் இருக்க வேண்டிய அவசியமான துனைகருவிகளில் நறுமன பெர்ஃப்யூம்களும் அவசியமாகும் . காருக்குள் மிக அருமையான நுறுமனங்களை தருபவற்றை பயன்படுத்துங்கள்.
             

குறிப்பு ;

எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட துனைகருவிகளுக்கு மிக அனுபவம் வாய்ந்த மெக்கானிக் அல்லது அங்கிகரீக்கப்பட்ட சேவை மையங்களில் பொருத்துவது மிகவும் நல்லதாகும்.

Must have car Accessories – Auto Tips in Tamil

Share