எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்

எஞ்சின் ஆயில் உள்ள சில முக்கிய வகைகள் மற்றும் எஞ்சின் ஆயில் சிறப்பம்சங்களை கானலாம். முன்பே எஞ்சின் ஆயில் முக்கியத்துவம் மற்றும் ஆயில் கிரேடு பற்றி பார்த்தோம்.
எஞ்சின் ஆயில்

எஞ்சின் ஆயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது

எஞ்சின் ஆயில் ஆனது பெட்ரோல், டீசல் போலதான் குரூட் ஆயில் மூலம்தான் தயாரிக்கப்படுகின்றது. அவற்றில் பல விதமான மாறுபட்ட அடிட்டீவ்ஸ் போன்றவைகளை சேர்த்து ஆயில் இயல்பு தன்மைக்கு மாற்றப்படுகின்றது.

எஞ்சின் ஆயில் வகைகள்

1. சிந்தெடிக் எஞ்சின் ஆயில்

சிந்தெடிக்  ஆயில் மிக சிறப்பான பெர்பாரமன்ஸ் வெளிப்படுத்தும். மேலும் எஞ்சின் சிறப்பாக மற்றும் ஸ்மூத்தாக இயங்கும்.

2. செமி சிந்தெடிக் எஞ்சின் ஆயில்

சிந்தெடிக்  ஆயிலை விட சற்று குறைவான தரத்துடன் அதாவது மினரல் ஆயில் கலக்கப்பட்ட ஆயில்தான் செமி சிந்தெடிக். அதாவது 30% சிந்தெடிக் ஆயில் கலக்கப்பட்டு இருக்கும்.

செமி சிந்தெடிக் ஆயில் மினரல் ஆயிலை விட சிறப்பான  பெர்பாரமன்ஸ் வெளிப்படுத்தும்.

3. மினரல் ஆயில்

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கு ஆயில் மினரல் ஆயில் ஆகும்.
சற்று குறைவான சுத்திகரிப்பிலே கிடைக்கும் ஆயில் ஆகும்.

உராய்வுகளை பெருமளவில் மினரல் ஆயில் தடுக்கும்.

4. மிஸ்டு ஆயில்

சிந்தெடிக் மற்றும் மினரல் ஆயில் இரண்டின் கலப்பில் இருக்கும்.

தனிபதிவுகளாக ஆயில்களின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் & தீமைகளை அலசலாம் காத்திருங்கள்.

எமது கருத்துரை அமைப்பு disqus முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே உங்கள் கருத்துரைகளை மற்றும் கேள்விகள் பேஸ்புக்,டிவிட்டர்,கூகுள்  ப்ளல் போன்ற சமூகதளங்களின் மூலமும் பதிவு செய்யலாம்.

Exit mobile version