டட்சன் பிராண்டு சிறிய ரக கார்கள் வருகிற 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்க்கான முயற்சியில் நிசான் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவினை மையமாக வைத்து உருவாக்கப்படும் டட்சன் கார்கள் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களுக்கு மிக பெரும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவான காராக விளங்கினாலும் மிக சிறப்பான வடிவமைப்பு தரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை பெற்று இருக்கும். நடுத்தர இந்திய மக்களை பெரிதும் கவரும்.

2017 ஆம் ஆண்டிற்க்குள் மொத்த இந்திய சந்தையின் 10 சதவீதத்தை கைப்பற்ற நிசான் திட்டமிட்டுள்ளது. எனவே அடுத்தடுத்து 5 மாடல்களை விற்பைக்கு கொண்டு வரவுள்ளது.

முதற்கட்டமாக கே2 என்ற கோடு பெயரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் வடிவமைப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றதாம். இந்த காரின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்பதால் விலை குறைவாக இருக்கும். இந்த காரின் விலை 3 லட்சம் முதல் 4.5 லட்சத்திற்க்குள் இருக்கும்.