ஹூண்டாய் QXi  எஸ்யூவிஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நியூ யார்க் ஆட்டோ ஷோவில் புதிய ஹூண்டாய் QXi காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக இந்தியாவில் மே மாதம் க்யூஎக்ஸ்ஐ எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக ஹூண்டாய் கார்லினோ என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் ஹூண்டாய் ஸ்டைக்ஸ் (Hyundai Styx) என்ற பெயரில் வெளியிப்படலாம். கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாக உள்ளது.

ஹூண்டாய் க்யூஎக்ஸ்ஐ காம்பேக்ட் எஸ்யூவி

தமிழகத்தில் சென்னை அருகே உள்ள ஹூண்டாய் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி கார் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்ட முன்புறத்தில் மிக நேர்த்தியான பகல் நேர ரன்னிங் விளக்குகள், மற்றும் புராஜெக்டர் ஹெட்லைட் யூனிட் தனியாக வழங்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் க்ரோம் பூச்சு உட்பட மேற்கூறையில் சன் ரூஃப் என பல்வேறு நவீன அம்சங்களை கொண்டதாகவும், புதுவிதமான வடிவமைப்பினை பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கும். தோற்றத்தில் பெரும்பாலான வடிவ மொழி தொடர்பான பாகங்கள் ஹூண்டாய் கோனா மற்றும் க்ரெட்டா எஸ்யூவியிடம் இருந்து பெற்றிருக்கலாம்.

இன்டிரியரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ர், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிளுடன், மடிக்கும் எலக்ட்ரிக் முறையிலான மிரர் அகியவற்றை பெற்றுள்ளது.

100 HP மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் அடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை வெர்னா காரிலிருந்து பெற்றிருக்கும். ஆக மொத்தமாக மூன்று என்ஜின் தேர்வை பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

புதிய விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி விளங்க உள்ளது.