Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஜாவா 300 மோட்டார் சைக்கிள் டெஸ்ட் செய்யும் படங்கள் வெளியானது

By MR.Durai
Last updated: 2,November 2018
Share
SHARE

செக் தயாரிப்பு நிறுவனமான ஜாவா நிறுவனம் தனது புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜாவா பிராண்ட்கள் தற்போது மகேந்திரா நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள கிளாசிக் லிஜென்ட் பிரைவேட் லிமிட் கைபற்றியுள்ளது. இந்த நிறுவனம் ஜாவா 300 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகத்திற்கு முன்பு இந்த மோட்டார் சைக்கிள்களின் ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக, ஸ்பை பிக்சர்ஸ் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் ஸ்டைல் மற்றும் டிசைன்கள் ரெட்ரோ ஜாவா மோட்டார் சைக்கிள்களுடனும் ஒத்திருக்கிறது. ஜாவா 300 மோட்டார் சைக்கிள் சோதனை படங்களில் வட்டவடிவில் ஹெட்லேம், வட்டவடிவ கண்ணாடிகள், இண்டிக்கேட்டர்கள், ஸ்போக்ஸ் வீல் மற்றும் ரியர் ஷாக் அப்சார்பர் கவர் போன்றவை பழைய மோட்டார் சைக்கிள்களில் இடம் பெற்றுள்ளதை போன்றே டிசைன் செய்யப்பட்டுள்ளது. டூவின் எக்ஸாஸ்ட் செட்டப்களுடன் சிங்கிள் சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பேர்லல் வடிவிலான சைடு கவர்களின் வடிவமைப்பை பார்க்கும் போதே, இது பிரபலமான ஜாவா மோட்டார் சைக்கிள் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் சஸ்பென்சன் செட்அப்களுடன், டெலிஸ்கோபிக் போர்க்கள் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது ராயல் என்பீல்ட் கிளாசிக் மோட்டார் சைக்கிள்களில் உள்ளதை போன்று இருக்கும். மேலும் பின்புறத்தில் கியாஸ் மூலம் சார்ஜ் செய்யப்பட்ட டூவின் ஷாக் அப்சார்பரகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அனலாக் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கிள் சேனல் எபிஎஸ் போன்றவை பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்றால், இவை அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் BS-VI ரெடி 293cc லிக்யுட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 27bhp மற்றும் 28Nm டார்க்யூ உடன் இயக்கும். மேலும் இந்த இன்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். வரும் 15 தேதி அறிமுகமாக உள்ள இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 1.5 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை). மார்டன் கிளாசிக் ஜாவா மோட்டார் சைக்கிள்கள், ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:Jawa 300 Motorcycle
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved