Automobile Tamilan

ரூ.3.66 லட்சத்தில் கிரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி விற்பனைக்கு வெளியானது

Greaves Eltra City

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூபாய் 3.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக கடந்தாண்டு இறுதியில் எல்ட்ரா சரக்கு வாகன உற்பத்தி மற்றும் விற்பனையானது தொடங்கப்பட்டிருந்தது தற்பொழுது பயணிகளுக்கான ஆட்டோ ரிக்சா ஆக வெளியிடப்பட்டுள்ளது.

Greaves Eltra City

10.8 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள எல்ட்ரா கார்கோ மாடல் அதிகபட்சமாக 9.5 kW அதிகபட்ச பவர் மற்றும்  49 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்ட்ரா ஒரே சார்ஜில் 160 கிலோ மீட்டர் மேல் செல்லும் திறன் கொண்டதாகும்.

எல்ட்ரா சிட்டி ஒரு அதிநவீன 6.2″ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும்,  வாகன இருப்பிடம் மற்றும் ஜியோ ஃபென்சிங், வாகனம் மற்றும் ஓட்டுநர் செயல்திறன் மேலாண்மை போன்ற அம்சங்களும் IoT திறன்களுடன் நிகழ்நேரத் தகவல் மற்றும் நேவிகேஷன் வசதி பயன்படுத்துவதில் ஓட்டுநர்களுக்கு உதவுகிறது.

ஆட்டோரிக்ஷா தவிர எல்ட்ரா பிக்கப், எல்ட்ரா டெலிவரி மற்றும் எல்ட்ரா ஃபிளாட்போர்டு என மூன்று விதமாக கிடைக்கின்றது.

எல்ட்ரா சிட்டிக்கு 3 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது (இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது).

Exit mobile version