கிரீவ்ஸ் நிறுவனம் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற எல்ட்ரா மூன்று சக்கர எலக்ட்ரிக் கார்கோ வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. 140 கன அடி கார்கோ கொள்ளளவு கொண்ட மாடலில் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும்.
கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் பெஹ்ல் குறிப்பிடுகையில், “இந்தியாவின் லாஸ்ட் மைல் டெலிவரி வனிகத்துக்கு ஏற்ற அம்சத்தை பெற்று நகர்ப்புற நுகர்வோருடன், எல்ட்ரா பெரிய மற்றும் சிறு வணிகங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும், எல்ட்ரா E3W சிறப்பான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகும்.
Greaves Eltra electric cargo
10.8 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள எல்ட்ரா கார்கோ மாடல் அதிகபட்சமாக 9.5 kW அதிகபட்ச பவர் மற்றும் 49 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்ட்ரா ஒரே சார்ஜில் 100 கிலோ மீட்டர் மேல் செல்லும் திறன் கொண்டதாகும்.
எல்ட்ரா பிக்கப், எல்ட்ரா டெலிவரி மற்றும் எல்ட்ரா ஃபிளாட்போர்டு என மூன்று விதமாக கிடைக்கின்றது.
6.2 இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ள 3 வீலரில் புளூடூத் இணைப்பின் மூலம் வணிக தேவைகளுக்கான நேவிகேஷன், வாகனத்தை கண்காணிப்பதற்கான அம்சத்தை உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. வாகன இருப்பிடம் மற்றும் ஜியோ ஃபென்சிங், வாகனம் மற்றும் ஓட்டுநர் செயல்திறன் மேலாண்மை போன்ற அம்சங்களும் இதில் அடங்கும்.
மாசு உமிழ்வு இல்லாத எல்ட்ரா வாகனம் மூலம் டெலிவரியை மேம்படுத்தவும், வேலையில்லா நேரத்தை குறைக்கவும் மற்றும் கடைசி மைல் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இடவசதி கொண்ட டெலிவரி பெட்டியையும் கொண்டுள்ளது. 140 கன அடி கொள்ளவு இடவசதி வழங்குகிறது.