₹ 14.79 லட்சம் விலையில் மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரி விற்பனைக்கு வந்தது

மஹிந்திராவின் இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள ஃப்யூரியோ 7 வரிசை டிரக்குகளில் 4-டயர் கார்கோ, 6-டயர் கார்கோ எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் என மொத்தமாக மூன்று விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஃப்யூரியோ இலகுரக வர்த்தக வாகனத்தின் அறிமுகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபுரியோ ரேஞ்ச் இன்டர்மீடியட் & இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் மஹிந்திரா ₹ 650 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான இத்தாலிய வடிவமைப்பு பிரிவான பினின்ஃபரினாவால் இந்திய சாலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஃப்யூரியோ 7 டிரக் சிறப்புகள்

புதிய மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரியில் மூன்று விதமான வேரியண்ட்களில் 4-டயர் சரக்கு, 6-டயர் சரக்கு எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் ஆகும். இந்நிறுவனத்தின் அறிக்கையில், ஃப்யூரியோ 7 எல்சிவி பிரிவில் பல பயன்பாடுகளை உள்ளடக்கியது. மேலும், சிறந்த இலாபத்தை சிறந்த தர மைலேஜ், அதிக பேலோட் மற்றும் பெஞ்ச்மார்க் கேபினுடன் உள்ளடக்கியது. வாகன டெலிமாடிக்ஸ் இந்நிறுவனத்தின் iMAXX இயங்குதளத்தால் கையாளப்படுகிறது.

இந்த டிரக்கில் இரு விதமான இன்ஜின் ஆப்ஷன் பயன்படுத்தப்படுகின்றது. 4 டயர் பெற்ற கார்கோ ஃப்யூரியோ 7 டிரக்கில் mDI 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 220 Nm டார்க் பெற்று 81 ஹெச்பி பவரை வழங்குகின்றது.

அடுத்தப்படியாக உள்ள 6-டயர் கார்கோ எச்டி, 6-டயர் டிப்பர் என இரண்டிலும் mDI 3.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 375 Nm டார்க் பெற்று 122 ஹெச்பி பவரை வழங்குகின்றது. பொதுவாக இரண்டு என்ஜினிலும் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Furio 7 10.5ft HSD – ரூ. 14.79 லட்சம்

Furio 7 HD – ரூ. 15.18 லட்சம்

Furio 7 Tipper- ரூ. 16.82 லட்சம்

(all ex-showroom Pune).

Exit mobile version