Skip to content

மோன்ட்ரா எலெக்ட்ரிக் வெளியிட்ட இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்புகள்

மோன்ட்ரா இவியேட்டர் டிரக்

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் இவியேட்டர் (Eviator e-SCV) இலகுரக டிரம் மற்றம் சூப்பர் கார்கோ மூன்று சக்கர வர்த்தக ஆட்டோ என இரண்டு மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்று சக்கர பிரிவில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் கார்கோ ஆட்டோ GVW 1.2 டன் பிரிவில் ரூ 437,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Montra Electric Super Cargo

500 கிலோ, 510 கிலோ மற்றும் 580 கிலோ சுமை ஏற்றும் திறன் கொண்ட மோன்ட்ரா சூப்பர் கார்கோ மாடலில் மூன்று விதமான வேரியண்ட் பெற்று 13.5 kWh பேட்டரி பேக் கொண்டு அதிகபட்ச பவர் 12 kW மற்றும் 70Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0-100 % சார்ஜிங் பெற 4.45 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில் முழுமையான சார்ஜில் 200 கிமீ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 150 கிமீ வழங்குகின்றது.

eCX (Pick Up), eCX d (140 Cu.Ft Container) மற்றும் eCX d+ (170 Cu.Ft Container) என மூன்று விதமாக கிடைக்கும் நிலையில் ஆரம்ப விலை ரூ.4.37 லட்சம் ஆகும்.
Montra Electric super cargo truck

Montra Electric Eviator

ரூ. 15.99 லட்சத்தில் துவங்குகின்ற மோன்ட்ரா இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கில் E350L, E350X என இரண்டு வேரியண்டுகள் பெற்றாலும் பொதுவாக 1707 கிலோ அதிகபட்ச சுமை தாங்கும் திறனுடன் GVW 3.5 டன் பிரிவில் 43 kWh பேட்டரி பேக் கொண்டு அதிகபட்ச பவர் 80 kW மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 7.4kwh AC சார்ஜர்  0-100 % சார்ஜிங் பெற 5.15 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில் முழுமையான சார்ஜில் 250 கிமீ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 170 கிமீ வழங்குகின்றது.

E350X வேரியண்டில் எல்இடி ஹெட்லைட், பனி விளக்கு, ஏசி கேபின், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பிரீமியம் இன்டீரியர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ள நிலையில் கூடுதலாக ADAS பாதுகாப்பு தொகுப்பினை ஆப்ஷனலாக பெறுகின்றது.

Montra Electric eviator truck