Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம் | Automobile Tamilan

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

093fc piaggio ape e city

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை ஏற்றி செல்லும் வகையிலான இரு பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அபே மின்சார ஆட்டோவிற்கு அரசு வழங்குகின்ற FAME II மானியம் கிடைக்கின்றது.

பியாஜியோ அபே ஆட்டோ விலை மற்றும் சிறப்புகள்

முன்பாக 2019 ஆம் ஆண்டு இந்நிறுவனம் 80 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கின்ற பேட்டரியை நீக்கும் வகையிலான நுட்பத்தை பெற்ற அபே இ-சிட்டி மூன்று சக்கர ஆட்டோவை தொடர்ந்து அபே எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலில் பேட்டரியை நீக்க முடியாத வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு புதிய E-City FX மாடல் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 110 கிமீ வரை பயணிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது. 48 வோல்ட் லித்தியம் ஐயன் 7.5 kWh பேட்டரி அதிகபட்ச பவராக 5.44 kWh அல்லது 7.3 bhp, 29 Nm டார்க் வழங்குகின்றது.

சுமை ஏற்றி செல்ல வந்துள்ள புதிய E-xtra FX மாடல் 48 வோல்ட் லித்தியம் ஐயன் 8 kWh பேட்டரி அதிகபட்ச பவராக 9.55 kWh அல்லது 12.8 bhp, 45 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகம் செல்லும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 90 கிமீ வரை பயணிக்கும். 6 அடி நீளம் உள்ள கார்கோ டெக்கில் 506 கிலோ வரை சுமை தாங்கும் திறனை கொண்டிருக்கின்றது.

இரு மாடல்களுக்கும் சார்ஜிங் நேரம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். மற்றபடி இரண்டு மாடல்களும் IP67 சான்றிதழ் உட்பட பொதுவான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. கிளஸ்ட்டரில் சார்ஜிங் ரேஞ்சு, டிரைவிங் மோட், சர்வீஸ் அலர்ட் மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களைக் காட்டுகிறது.

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ விலை பட்டியல்

Ape e-City FX – ₹ 2.84 லட்சம்

Ape E-Xtra FX – ₹ 3.12 லட்சம்

(விலை எக்ஸ்ஷோரூம் இந்தியா, ஃபேம் II மானியம் அடக்கம் )

Exit mobile version