Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.8.99-16.99 லட்சத்தில் கியா சிரோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது.!

டாப் வேரியண்டில் லெவல்-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்ற வேரியண்ட் ஆட்டோமேட்டிக் வகையில் மட்டும் கிடைக்கின்றது.

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 1,February 2025
Share
2 Min Read
SHARE
Highlights
  • கியா சிரோஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.8,99,900 ஆக உள்ளது.
  • 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு ஆப்ஷன் உள்ளது.
  • டாப் வேரியண்டில் 30 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

கியா சிரோஸ்

கியா இந்தியா நிறுவனத்தின் பாக்ஸ் ஸ்டைல் பெற்ற மிக நேர்த்தியான புதிய காம்பேக்ட் சிரோஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ₹8.99 லட்சம் முதல் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 16.99 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள உள்ள பல்வேறு எஸ்யூவிகளை எதிர்கொள்ளுகின்றது.

Kia Syros Price list

1.0 Turbo Petrol Engine
 HTK MT- Rs. 8,99,900
HTK (O) MT – Rs. 9,99,900
HTK+ MT- Rs. 11,49,900
HTX+ MT- Rs. 13,29,900
HTK+ AT- Rs. 12,79,900
HTX AT- Rs. 14,59,900
HTX+ AT – Rs. 15,99,900
1.5 L Diesel Engine
HTK MT – Rs. 10,99,900
HTK+ MT- Rs. 12,49,900
HTX MT- Rs. 14,29,900
HTX+ AT- Rs. 16,99,900

கூடுதலாக ADAS வசதி பெறுகின்ற HTX Plus (O) பெட்ரோல் ரூ.16.79 லட்சம் மற்றும் HTX Plus (O) டீசல் 17.79 லட்சம்  அறிவிக்கப்பட்டுள்ள விலை அறிமுக சலுகை என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரோஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடல் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ (மேனுவல்) மற்றும் 17.68 கிமீ (ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது.

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிரோஸ் மாடலில் 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற கார் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.75 கிமீ (மேனுவல்) மற்றும் 17.6 கிமீ (ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் னைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளது.

டாப் HTX+(O) வேரியண்டில் முன் மோதல் எச்சரிக்கை, பிளைன்ட் வியூ மானிட்டர், லேன் கிப் அசிஸ்ட் என 16க்கு மேற்பட்ட வசதிகளை பெற்ற LEVEL-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டுள்ளது.

More Auto News

டாப் 10 மைலேஜ் கார்கள் – மோட்டார் நியூஸ்
ஹோண்டா சிட்டி கார்
மாருதி வேகன் ஆர் அவான்ஸ் சிறப்பு பதிப்பு
ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி- 7
ரூ.6.99 லட்சத்தில் ஸ்கோடா ரேபிட் ரைடர் விற்பனைக்கு வெளியானது

kia syros rear seat

2025 மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா
கூடுதல் வசதிகளுடன் 2025 மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா விலை விபரம்
இரண்டு புதிய நிறங்களை XUV700 காரில் வெளியிட்ட மஹிந்திரா
மேக் இன் இந்தியா : மெர்சிடிஸ் சி கிளாஸ் கார்
ஜிம்னி எஸ்யூவி உற்பத்தியை துவங்கிய மாருதி சுசூகி
கியா EV6 மின்சார காருக்கு முன்பதிவு துவங்கியது
TAGGED:Kia Syros
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved