Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Car News
Car News

ரூ.8.38 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 டார்க் எடிசனின் சிறப்பம்சங்கள்

By நிவின் கார்த்தி
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

பல்வேறு கார் நிறுவனங்களை தொடர்ந்து சிட்ரோன் இந்திய தனது C3 காரில் டார்க் எடிசன் என்ற பெயரில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.8.38 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Citroen C3 Dark Edition

ரூ.19,000 வரை சாதாரண மாடலை விட கூடுதல் விலையில் வந்துள்ள டார்க் எடிசன் ஷைன் வேரியண்டில் அடிப்படையில் உள்ளது.

Live₹ 6,23,000
Feel₹ 7,52,000
Shine₹ 8,15,800
Shine Dual Tone₹ 830800
Shine Turbo Dual Tone₹ 9,35,800
Turbo Shine AT₹ 9,99,800
Turbo Shine AT Dual Tone₹ 10,14,800
Shine Dark Edition₹ 8,38,800
Turbo Shine Dark Edition₹ 9,58,800
Turbo Shine Dark Edition AT₹ 10,19,800

ஏப்ரல் 10 , 2025 முதல் விற்பனைக்கு கிடைக்கின்ற டார்க் எடிசன் ஆனது இந்நிறுவனத்தின் பாசால்ட் மற்றும் ஏர்கிராஸ் போன்ற மாடல்களிலும் கொண்டு வரப்பட்டு முதல் பாசால்ட் பிளாக் எடிசன் எம்.எஸ் தோனி அவர்களுக்கு டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.

பெர்லா நேரா கருப்பு என்ற நிறத்தை பெற்றுள்ள C3 காரில் உள்ள லோகோ உட்பட அனைத்திலும் எழுத்துகள், கிரில் மற்றும் பக்கவாட்டு மோல்டிங்கு கருமை நிற க்ரோம் பெற்றுள்ளது.

15-இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ள C3 டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், இருக்கைகள், சென்டர் கன்சோல் போன்றவற்றுக்கு கார்பன் பிளாக் நிறத்துடன் சிவப்பு நிற தையல்களை பெற்று சில இடங்களில் பளபளப்பான கருப்பினை கொண்டுள்ளது.

1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதலாக,  1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

Citroen C3
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleபாசால்ட் டார்க் எடிசனை விற்பனைக்கு வெளியிட்ட சிட்ரோன்
Next Article சிட்ரோன் ஏர்கிராஸ் டார்க் எடிசன் ரூ.13.13 லட்சத்தில் ஆரம்பம்.!

Related Posts

volvo xc60 2025

இந்தியாவில் ரூ.71.49 லட்சத்தில் புதிய வால்வோ XC60 அறிமுகமானது

carens clavis price

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.