QWD என டாடா மோட்டார்ஸ் அழைக்கின்ற ஆல் வீல் டிரைவ் வசதியை பெற்ற டாடாவின் ஹாரியர் இவி மாடல் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
முன்பே டீசர் உட்பட தொடர்ந்து பல்வேறு சாகசங்கள் சார்ந்த நிகழ்வுகளில் ஹாரியர் இவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியுள்ள நிலையில், வரவுள்ள காரில் பெரிய பேட்டரி ஆப்ஷன் அதிகபட்சமாக நிகழ் நேரத்தில் 500 கிமீ வெளிப்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
“Acti.ev” பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள ஹாரியரின் பேட்டரி விபரங்கள் மற்றும் பவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தற்பொழுது வரை வெளியாகவில்லை. ஆனால் வரவுள்ள மாடல் 450-600 கிமீ வரையிலான ரேஞ்ச் பிரிவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டேஸ்போர்டின் மத்தியில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குவதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடுதலாக சன்ரூஃப், ஆம்பியன் லைட்டிங் என பலவற்றை கொண்டிருக்கும்.
அடுத்து, மிக முக்கியமாக பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் 3 புள்ளி சீட் பெல்ட், 7 ஏர்பேக்குகள் உட்பட லெவல் 2 ADAS , 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என பலவற்றை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விற்பனைக்கு ஜூன் 3 ஆம் தேதி வரவுள்ள டாடா ஹாரியர் இவி விலை ரூ.25 லட்சத்தில் துவங்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.