ஹோண்டா நிறுவனத்தின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலை ஆனது இந்தியாவில் உள்ள விதால்ப்பூர் ஆலை ஆக மாற உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 920 முதலீட்டு ஆனது நான்காவது உற்பத்தி பிரிவை துவங்குவதனால் இந்நிறுவனத்தின் தற்பொழுது உள்ள 37 ஆலைகளில் மிகப்பெரிய ஆலையாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில் இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ஆறு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் என நிறுவனம் கூறுகின்றது. எனவே, 2027 இறுதிக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை 70 லட்சம் ஆக உயரும் என குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது HMSI இந்தியாவில் நான்கு உற்பத்தி வசதிகளை கொண்டுள்து ஹரியானாவில் உள்ள மானேசர் (38,000 யூனிட்கள்), ராஜஸ்தானில் உள்ள தபுகரா (1.3 மில்லியன் யூனிட்கள்), கர்நாடகாவில் உள்ள நரசிபுரா (2.5 மில்லியன் யூனிட்கள்), மற்றும் குஜராத்தில் உள்ள வித்தலாபூர் (1.96 மில்லியன் யூனிட்கள்) மொத்தம் 6.14 மில்லியன் யூனிட்கள் திறன் கொண்டது. வித்தலாப்பூரில் உள்ள கூடுதல் நான்காவது உற்பத்தி பிரிவு அதன் ஆண்டு உற்பத்தி திறனில் 6,50,000 யூனிட்களைச் சேர்க்கும் என்பதனால் ஆலையின் மொத்த உற்பத்தி திறன் 2.61 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும்.
1999 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் தனித்து ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கிய ஹோண்டா நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஹீரோ பிரிந்த பின்னர் மிக சிறப்பான வளர்ச்சியை ஸ்கூட்டர் மற்றும் 125சிசி க்கு கூடுதலான பிரிவில் பெற்று வருகின்றது.