Skip to content

2025 யெஸ்டி அட்வென்ச்சர் ட்வீன் ஹைட்லைட் உடன் வெளியானது

yezdi adventure 2025 new

யெஸ்டி அட்வென்ச்சர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை பிரிவு கொண்ட முகப்பு விளக்குடன், புதிய நிறங்கள், பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் பாடி கிராபிக்ஸ் பெற்று ரூ. 2.15 லட்சம் முதல் ரூ.2.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Yezdi Adventure

முந்தைய ஒற்றை முகப்பு விளக்கிற்கு பதிலாக தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள இரட்டை பிரிவில் வலதுபுறத்தில் ரிஃபெலக்டர், அடுத்து புராஜெக்டர் LED ஹெட்லைட் ஆனது இடதுபுறத்தில் இடம்பெற்று பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் இரண்டு பிரிவாக வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி, ஃபென்டர், அட்ஜெஸ்ட்பிள் முறையிலான விண்ட்ஸ்கீரின் உள்ளிட்ட மாறுதல்களுடன் தற்பொழுது 6 விதமான புதிய நிறங்களை கொண்டுள்ளது.

தொடர்ந்து  334சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின்  29.20bhp மற்றும் 29.6Nm டார்க்கை உருவாக்குகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025 yezdi adventure twin headlight

குறிப்பாக யெஸ்டி அறிமுகத்தின் போது கூறுகையில் சிறப்பான செயல்திறனுக்காக மேம்படுத்தப்பட்ட கியர் விகிதங்கள் மற்றும் திருத்தப்பட்ட எரிபொருள் மேப்பிங் போன்ற காரணத்தால் ரைடர்கள் சிறப்பான அனுபவத்தை பெறக்கூடும் என உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த ஏபிஎஸ் மேம்பாட்டில் Road, Rain மற்றும் Off-Road என மூன்று மோடுகளுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் பெரிய மாற்றமில்லாமல் 220மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 41மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சரிசெய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

முன்புறத்தில் 21-இன்ச் முன்புறம் மற்றும் 17-இன்ச் பின்புறம், வயர்-ஸ்போக் வீலுடன் பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் உள்ளது.

4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ உத்தரவாதம், ஒரு வருட சாலையோர உதவியையும் வழங்குகின்றது. மேலும் வாங்குபவர்கள் 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட காப்பீட்டையும் தேர்வு செய்யலாம்.

ஆட்டோமொபைல் தமிழன் பார்வையில்

போட்டியாளர்களான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் , ஸ்கிராம் 440, உட்பட கேடிஎம் அட்வென்ச்சர் 390 என பலவற்றை எதிர்கொள்ளும் யெஸ்டி அட்வென்ச்சர் ஸ்டைலிங் மாற்றம் கவர்ந்தாலும் வலுவான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை மேம்படுத்தினால் ஓரளவு விற்பனை எண்ணிக்கையை எதிர்பார்க்கலாம்.