இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் பைக்குகளின் என்ஜின், சிறப்பம்சங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
ரூ.5 லட்சம் விலைக்குள் மட்டும் அமைந்துள்ள அட்வென்ச்சர் பைக்குகள் மட்டுமே இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V, ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411, யெஸ்டி அட்வென்ச்சர், சுசூகி V-strom SX, பிஎம்டபிள்யூ G310 GS கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளது.
2023 Royal Enfield Himalayan
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் 411 என இரண்டு மாடல்களும் ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டு ஸ்டைலிங் அம்சங்களில் சிறிய மாற்றத்தை பெற்றுள்ளது. Scram 411 பைக்கில் 19 அங்குல முன்புற வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் உள்ளது. ஹிமாலயன் பைக் மாடலில் 21 அங்குல முன்புற வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் உள்ளது. சுவிட்சபிள் ஆப்ஷனுடன் கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு பைக் மாடல்களில் பொதுவாக 411CC என்ஜின் அதிகபட்சமாக 24.3BHP பவரை 6500RPM-ல்
மற்றும் டார்க் 32NM ஆனது 4250±250rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. பல்வேறு மாறுபட்ட நிறங்களை கொண்டதாக கிடைக்கின்ற ஹிமாலயன் பைக் இந்தியாவின் மிக நம்பகமான மாடலாகும்.
2023 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 2,15,900 (Gravel Grey), ₹ 2,22,400 (Pine Green, Dune Brown) மற்றும் ₹ 2,28,490 (Glacier Blue, Granite Black, Sleet Black)
2023 ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 2,06,394 (Graphite Red, blue Yellow), ₹ 2,08,257 (Blazing Black, Skyline Blue) மற்றும் ₹ 2,11,984 (White Flame, silver spirit)
Royal Enfield Himalayan/Scram 411 Engine Specs | |
Engine Displacement (CC) | 411 cc Fi, Single Cylinder air cooled |
Power | 24.3BHP at 6500RPM |
Torque | 32NM at 4250±250RPM |
Gear Box | 5 Speed |
2023 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 2,43,933 & ₹ 2,46,023 மற்றும் 2,50,083 (White Flame, silver spirit)
2023 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 2,54,349 (Gravel Grey), 2,61,431 (Pine Green, Dune Brown) மற்றும் ₹ 2,68,066 ( Glacier Blue, Granite Black, Sleet Black)
2023 Hero Xpulse 200 4V
இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் பைக் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கில் ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்ற சிங்கிள சேனல் ஏபிஎஸ் கொண்டு வந்துள்ளது. மிக சிறப்பான ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி வழங்கும்.
முன்புறத்தில் 90/90-21 M/C 54S டயர் மற்றும் பின்புறத்தில் 120/80-18 M/C 62S டயர் இருக்கின்றது. இதன் புரோ மாடல் 270 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ள நிலையில், சாதாரண வேரியண்ட் 220 mm மட்டுமே கொண்டதாக கிரவுண்ட் கிளியரன்ஸ் அமைந்திருக்கின்றது. கனெக்ட்டிவிட்டி வசதிகள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை பெற்று நன்கு விதமான நிறங்களை மட்டுமே கொண்டதாக வந்துள்ளது.
2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடல் எக்ஸ்ஷோரூம் விலை – ₹ 1,43,516 மற்றும் Pro -₹ 1,50,891
Hero Xpulse 200 4V Engine Specs | |
Engine Displacement (CC) | 199 cc Fi, Single Cylinder oil cooled |
Power | 18.9 BHP at 8500RPM |
Torque | 17.3 NM at 6500RPM |
Gear Box | 5 Speed |
2023 ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 200 4V ₹ 1,66,380 முதல் ₹ 1,74,150 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ஆகும்.
2023 Honda CB 200X
அர்பன் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற ஹோண்டா CB 200X பைக்கில் 184.4 cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 110/70-17 M/C 54S (Tubeless) மற்றும் 140/70-17 M/C 66S (Tubeless) பின்புறத்தில் பெற்று யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷனுடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
2023 ஹோண்டா சிபி 200 எக்ஸ் மாடல் எக்ஸ்ஷோரூம் விலை – ₹ 1,49,678
Hero Xpulse 200 4V Engine Specs | |
Engine Displacement (CC) | 184.4 cc Fi, Single Cylinder |
Power | 17.01 BHP at 8500RPM |
Torque | 16.3 NM at 6500RPM |
Gear Box | 5 Speed |
2023 ஹோண்டா CB 200X ₹ 1,72,980 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ஆகும்.
2023 Yezdi Adventure
மஹிந்திரா கிளாசிக் லெஜெட்ஸ் நிறுவனத்தின் யெஸ்டி பிராண்டில் கிடைக்கின்ற அட்வென்ச்சர் பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு நேரடியான சவாலினை வழங்குகின்றது.
334 cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் 21 அங்குல அலாய் வீல், மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் 17 அங்குல வீல் உள்ளது.
2023 யெஸ்டி அட்வென்ச்சர் விலை ₹ 2,18,900 முதல் ₹ 2,22,942 வரை உள்ளது.
Yezdi Adventure | |
என்ஜின் (CC) | 334 cc |
குதிரைத்திறன் | 29.89 bhp @ 8000 rpm |
டார்க் | 29.84 Nm @ 6500 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 30 Kmpl |
2023 யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 2,54,125 முதல் ₹ 2,57,348 வரை ஆகும்.
2023 Suzuki V-Strom SX
மிக சக்தி வாய்ந்த அட்வென்ச்சர் பைக் மாடல்களில் ஒன்றான சுசூகி வி-ஸ்ட்ராம் SX பைக்கின் முன்புறத்தில் 100/90-19M/C 57S மற்றும் பின்புறத்தில் 140/70-17M/C 66S டயர் கொடுக்கப்பட்டுள்ளது. சுசூகி ரைட் கனெக்ட் ஆப் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் என பலவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.
249cc ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 26.5ps பவரை 9300rpm-லும் மற்றும் 22.2Nm டார்க் 7300rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கான்ஸ்டென்ட் மெஸ் கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உள்ளது.
சுசூகி V-Strom SX விலை ₹ 2,15,836 (எக்ஸ்ஷோரூம்)
Suzuki V-Strom SX | |
என்ஜின் (CC) | 249 cc |
குதிரைத்திறன் | 26.5 bhp @ 9300 rpm |
டார்க் | 22.2 Nm @ 7300 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 32 Kmpl |
2023 சுசூகி V-Strom SX பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,48,348 வரை ஆகும்.
2023 BMW G310 GS
பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் குறைந்த விலை ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக் மாடல் மிகவும் நேர்த்தியான டிசைன் அமைப்பினை கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. போட்டியாளர்களை விட சற்று கூடுதலான விலையில் அமைந்துள்ளது.
34 hp பவரை 9,250 rpm-ல் வெளிப்படுத்தும் 313cc லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு 28 Nm டார்க் 7,500 rpm-ல் வழங்கி 6 வேக கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது. 41 mm அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
110/80 R19 மற்றும் பின்புறத்தில் 150/70 R17 டயர் வழங்கப்பட்டு இரு பக்க டயர்களிலும் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக் உள்ளது.
2023 பிஎம்டபிள்யூ G310 GS பைக்கின் விலை ₹ 3,25,000
BMW G310 GS | |
என்ஜின் (CC) | 313 cc |
குதிரைத்திறன் | 34 bhp @ 9250 rpm |
டார்க் | 28 Nm @ 7500 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 31 Kmpl |
2023 பிஎம்டபிள்யூ G310 GS அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 3,68,650 (தமிழ்நாடு)
2023 KTM 250 Adventure
கேடிஎம் நிறுவனத்தின் அட்வென்ச்சர் வரிசையில் உள்ள குறைந்த விலை 250 அட்வன்ச்சர் பைக்கில் 248.76 cc என்ஜின் கொடுக்கப்பட்டு 29.63 bhp பவரை 9,000 rpm-ல் மற்றும் 24 Nm டார்க் 7,500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 100/90 – 19 மற்றும் 130/80 – 17 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ் உள்ளது.
2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 2,46,650 (எக்ஸ்ஷோரூம்)
KTM 250 Adventure Engine Specs | |
Engine Displacement (CC) | 248.76 cc Fi, Single Cylinder Liquid cooled |
Power | 30 bhp at 9000 rpm |
Torque | 24 Nm at 7500 rpm |
Gear Box | 6 Speed |
2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,81,550 (எக்ஸ்ஷோரூம்)
2023 KTM 390 Adventure
கேடிஎம் 390 அட்வென்ச்சரில் 373.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.
உயர் ரக SW வேரியண்டில் ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் ட்யூப் பயர் வழங்கப்பட்டு ஸ்போக்டு வீல் மற்றும் அட்ஜெஸ்ட்மென்ட கொண்ட இருபக்க சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
19-இன்ச் முன்புற ஸ்போக் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற ஸ்போக் வீல், முன்புறத்தில் WP அபெக்ஸ் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டுக்கு ஒவ்வொன்றும் 30 கிளிக்குகள் உள்ளது. பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோ-ஷாக் ஆனது 10 ஸ்டெப் முறையில் ரைடருக்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாக விளங்குகின்றது.
2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விலை ₹ 2.81 லட்சம்
2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை ₹ 3.39 லட்சம்
2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் V விலை ₹ 3.39 லட்சம் (உறுதி செய்யப்படவில்லை)
2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் SW விலை ₹ 3.60 லட்சம்
KTM 390 Adventure Engine Specs | |
Engine Displacement (CC) | 373.2 cc Fi, Single Cylinder Liquid cooled |
Power | 43 bhp |
Torque | 37 Nm |
Gear Box | 6 Speed |
- 2023 KTM 390 Adventure X – ₹ 3.26 லட்சம்
- 2023 KTM 390 Adventure STD – – ₹ 3.92 லட்சம்
- 2023 KTM 390 Adventure V – ₹ 3.93 லட்சம்
- 2023 KTM 390 Adventure Spoke- ₹ 4.05 லட்சம்
(All price on-road Tamil Nadu )