Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

By MR.Durai
Last updated: 27,June 2025
Share
SHARE

upcoming hybrid cars in India

இந்தியாவில் மின்சார வாகனங்கள் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் மிக வலுவான ஹைபிரிட் (Strong Hybrid) சார்ந்த வாகனங்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய், கியா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், நிசான், மஹிந்திரா உட்பட முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தீவரமாக செயல்பட்டு வருகின்றது.

Contents
  • ஹூண்டாய், கியா
  • ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன்
  • ரெனால்ட், நிசான்
  • மஹிந்திரா
  • ஹோண்டா கார்ஸ்

தற்பொழுது இந்திய சந்தையில் டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி என இரு நிறுவனங்களும் ஹைபிரிட் சார்ந்த மாடல்களின் விற்பனையில் சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தும் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும் ஹோண்டா சிட்டி ஹைபிரிட் கிடைக்கின்றது.

ஹூண்டாய், கியா

இந்தியாவை மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனம், மூன்றாம் தலைமுறை க்ரெட்டா ஹைபிரிட் வெர்ஷனும் விற்பனைக்கு 2027 ஆம் ஆண்டு வருவதை அதிகார்ப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் உடன் அனைத்தும் பகிர்ந்து கொள்ளுகின்ற கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி மாடலும் பகிர்ந்து கொள்ள உள்ளது.

க்ரெட்டா நடுத்தர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக உள்ள இந்த மாடல் எலக்ட்ரிக், பெட்ரோல், டீசல், மற்றும் ஹைபிரிட் என நான்கு பிரிவிலும் கிடைக்கும் டிசைன் மாற்றங்கள் உட்பட கூடுதலாக நவீன வசதிகளை பெறக்கூடும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன்

ஐரோப்பாவின் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் இரண்டும் தங்களுக்குள் இந்திய சந்தைக்கான பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில், தற்பொழுது இந்நிறுவனத்தின் விர்டஸ், டைகன், ஸ்கோடா ஸ்லாவியா, குஷாக் ஆகியவற்றில் ஹைபிரிட் சார்ந்த மாடல்கள் கூடுதலாக எலக்ட்ரிக் ஆகியவற்றை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள், 2028 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

ரெனால்ட், நிசான்

ரெனால்ட் இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் ட்ரைபர், கிகர் மேம்பாடு, புதிய 2026 ரெனால்ட் டஸ்ட்டர், 7 இருக்கை பிக்ஸ்டெர் அல்லது போரியல் , இறுதியாக க்விட் எலக்ட்ரிக் ஆகியவை வெளியிட உள்ளது. இந்த மாடல்களை நிசான் நிறுவனமும் பகிர்ந்து கொள்ள உள்ளது.

டஸ்ட்டர் மற்றும் 7 இருக்கை பிக்ஸ்டெர் என இரண்டு மாடல்களும் ஹைபிரிட் எஞ்சினை பெற உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

மஹிந்திரா

மிக வேகமாக மின்சார வாகனம் மற்றும் எஸ்யூவி சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் மஹிந்திரா நிறுவனம், ஹைபிரிட் சார்ந்த எஞ்சினை அனைத்து ICE வாகனங்களும் மட்டுமல்லாமல் கூடுதலாக BE6, XEV 9e என இரு மாடல்களில் நீட்டிக்கும் வகையிலான ஹைபிரிட் ஆப்ஷனை 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டு வருவதற்கான வாய்ப்பினை ஆராய்ந்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனேகமாக 2026 ஆம் ஆண்டின் மத்தியில் மற்றும் இறுதியில் ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஏற்கனவே சிட்டி e:HEV மாடல் விற்பனையில் உள்ள நிலையில், கூடுதலாக எலிவேட் உட்பட வரவுள்ள புதிய எஸ்யூவி மற்றும் செடான் ஆகியவற்றில் ஹைபிரிட் மாடல்களை கொண்டு வரவுள்ளது.

ஆனால், நாட்டின் மற்றொரு முன்னணி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதே மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நிலையில் ஹைபிரிட் சார்ந்த வாகனங்கள் மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:Hybrid vehicleMahindraNissanRenaultSkoda Auto Volkswagen
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ஓலா S1 X எலக்ட்ரிக்
Ola Electric
ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved