ஜூலை 22 ஆம் தேதி இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள காரன்ஸ் கிளாவிஸ்.EV காருக்கு புக்கிங் கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் டெலிவரியை துவங்க கியா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
7 இருக்கை கொண்ட எம்பிவி ரக காரன்ஸ் கிளாவிஸ் அடிப்படையில் தயரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார பேட்டரி காரில் 51.4 kwh மற்றும் 42 Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது.
- 51.4 kWh பேட்டரி பேக், ARAI-சான்றளிக்கப்பட்ட 490 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
- ARAI-சான்றளிக்கப்பட்ட 404 கிமீ ரேஞ்சை கொண்ட 42 kWh பேட்டரி பெற்றுள்ளது.
100kW DC சார்ஜர் மூலம் வெறும் 39 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.
HTK+, HTX, HTX ER, HTX+ ER என நான்கு விதமான வகையில் 6 விதமான நிறங்களை பெற்றுள்ள இந்த மாடலில் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்டரோல், 6 ஏர்பேக்குகள், டயர் பிரெஷர் மானிட்டர், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், மலை ஏற மற்றும் இறங்க உதவும் வசதி, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் சென்சார் உள்ளன.
டாப் வேரியண்டில் கேபின் காற்று சுத்திகரிப்பு வசதியுடன், i-Pedal-க்கான ஆட்டோ மோடு, 20 விதமான பாதுகாப்பு சார்ந்த வசதிகளை பெற்ற Level- 2 ADAS, 360-டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.