Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Car News

இந்தியாவில் ரூ.74.99 லட்சத்தில் எம்ஜி சைபர்ஸ்டெர் வெளியானது

By Automobile Tamilan Team25,July 2025No Comments
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

MG CyberSter electric car

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் ரக ஆல் வீல் டிரைவ் பெற்ற சைபர்ஸ்டெர் எலக்ட்ரிக் காரின் விலை ரூ74.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விலை ரூ.72.49 லட்சமாக கிடைக்கின்றது. கூடுதலாக 3.3kW போர்ட்டபிள் சார்ஜர், 7.4kW வால்பாக்ஸ் மற்றும் பொருத்துவற்கான செலவுகள் விலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கத்திரிக்கோல் வகையிலான திறக்கும் கதவுகளை பெற்றுள்ள சைபர்ஸ்டெரில் 77Kwh பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 510 PS பவர் மற்றும் 725Nm டார்க் வழங்குகின்றது பவர் அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும் வகையில் ஆல்வீல் டிரைவ் முறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

580 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள மாடலில் சிவப்பு கூரையுடன் கூடிய ஆண்டிஸ் கிரே, கருப்பு கூரையுடன் கூடிய ஃபிளேர் ரெட், சிவப்பு கூரையுடன் கூடிய மாடர்ன் பீஜ் மற்றும் கருப்பு கூரையுடன் கூடிய நியூக்ளியர் மஞ்சள் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

MG CyberSter dashboard

20 அங்குல ஸ்போர்ட்டிவ் வீல் பெற்று 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் 7-இன்ச் இன்ஃபர்மேஷன் டச்ஸ்கிரீன், டிரைவரின் இடது பக்கமாக அமைந்துள்ளது.

முதல் உரிமையாளருக்கு வாழ்நாள் HV பேட்டரி உத்தரவாதம் கிடைக்கும். வாகனத்திற்கு 3 வருடம் அல்லது வரம்பற்ற கிமீ உத்தரவாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்பொழுது துவங்கப்பட்டுள்ள 13 எம்ஜி செலக்ட் டீலர்கள் மூலம் டெலிவரி ஆகஸ்ட் 10 முதல் சைபர்ஸ்டெர், M9 துவங்க உள்ளது.

MG Cyberster MG M9
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Article6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெளியானது
Next Article விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

Related Posts

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெளியானது

Live Search

Blocksy: Search Block

Posts

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.