மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலாக Bantam 350 இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியாவின் சில நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் ஜாவா 42FJ மாடலில் இருந்து பகிரப்பட்டுள்ள பல்வேறு டிசைன் அம்சங்களுடன் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளில் கிடைக்கின்ற 334cc எஞ்சினை பான்டம் பகிர்ந்து கொண்டுள்ளது.
BSA பான்டம் 350
பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் Bantam என்ற பெயரில் மாடல்களை 1948 முதல் 1971 வரை தயாரிக்கப்பட்ட இலகுரக 2-ஸ்ட்ரோக் எஞ்சின் பெற்ற மாடல்களாகும், இது 123-173cc வரையிலான பிரிவில் மிகப்பெரிய விற்பனை வெற்றியைப் பெற்றது. அந்த பெயரை மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளது.
Bantam 350 மாடலில் இடம்பெற்றுள்ள 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரெட்ரோ டிசைனை தக்கவைத்துக் கொண்டுள்ள பான்டம் ஆனது மிக நேர்த்தியாக நிறங்களை பெற்று டேங்க் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட் என அனைத்திலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் இந்நிறுவனம் பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 மாடலை விற்பனை செய்து வரும் ஸ்கிளாம்பளர் 650 விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் பான்டம் 350 இந்தியாவிற்கு கொண்டு வரும் வாய்ப்பு மிக குறைவு , இதற்கு காரணம் ஜாவா 42FJ உள்ளதால், ஆனால் பான்டம் 350 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
குறிப்பாக பான்டம் 350 மூலம் சர்வதேச சந்தையில் கிளாசிக் 350 உட்பட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.