Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பி.எஸ்.ஏ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்போது ?

by automobiletamilan
November 17, 2020
in கார் செய்திகள்

மஹிந்திரா கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், பிரிட்டிஷ் பி.எஸ்.ஏ (BSA) மோட்டர்சைக்கிள் ஐசி இன்ஜின் பெற்ற மாடல்களின் உற்பத்தியை துவங்குவதுடன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகத்தை 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ள உள்ளது.

பி.எஸ்.ஏ அல்லது பர்மிங்காம் ஸ்மால் ஆர்ம்ஸ் (Birmingham Small Arms), மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Classic Legends Private Limited) மூலம் 2016 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் இந்தியாவில் புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்கிறது. ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டு ஒராண்டுக்குள் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

பி.எஸ்.ஏ முதலில் துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக 1861 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. பின்னர் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தயாரிக்க துவங்கியநிலையில் 1950 களில், உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளராக விளங்கியது. ஆனால் காலபோக்கில் 1970-ல் திவாலான பின்னர் உற்பத்தியை நிறுத்தியது. 1950, 1960 களில், ட்ரையம்ப், நார்டன் மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஆகியவற்றுடன் பிஎஸ்ஏ உலகெங்கிலும் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றாக விளங்கியது.

முதற்கட்டமாக இங்கிலாந்தில் தனது ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு மையத்தை உருவாக்க உள்ள பிஎஸ்ஏ, 2021 ஆம் ஆண்டின் மத்தியல் ரூ.5 லட்சம் – ரூ.10 லட்சம் விலைக்குள் தயாரிக்கப்பட உள்ள ஐசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. பிறகு ஆண்டின் இறுதியில் எலக்ட்ரிக் பைக்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

வரும் 31,2020 இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதனால் பிரெக்ஸிட் -க்கு பிறகு முதலீடுகளை மஹிந்திரா மேற்கொள்ள உள்ளது.

web title : BSA Motorcycles Production To Restart next year

Tags: BSA Motorcycles
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version