100cc சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா நிறுவன ஷைன் 100 DX மற்றும் ஷைன் 100 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும், சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் வசதிகளில் வேறுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரு மாடல்களிலும் இடம்பெற்றுள்ள 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹோண்டா 100cc பைக்குகளின் ஆன்-ரோடு விலைப் பட்டியல்
ஹோண்டாவின் 100சிசி எஞ்சின் பெற்ற ஷைன் 100 ஆன்-ரோடு விலை ரூ. 86,543 முதல் ஷைன் 100 டிஎக்ஸ் விலை ரூ. 92,654 ஆகும்.
Honda 100cc | Price | on-road Price |
Shine 100 | Rs 70,589 | Rs 86,543 |
Shine100DX | Rs 76,809 | Rs 92,254 |
Honda Shine 100 DX Vs Shine 100
புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் சில இடங்களில் க்ரோம் பாகங்கள் என சற்று பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஷைன் 100 டீலக்ஸ் அமைந்துள்ளது. அடிப்படையாக பேர்ல் இக்னியஸ் கருப்பு, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஜெனி கிரே மெட்டாலிக் என 4 வண்ணங்களை பெற்றுள்ளது.
ஷைன் 100 மாடலை பொறுத்தவரை பெரிய அளவில் க்ரோம் பாகங்கள் இல்லை, எளிமையான வடிவமைப்புடன் சிவப்பு நிறத்துடன் கருப்பு, தங்கத்துடன் கருப்பு, நீலத்துடன் கருப்பு, பச்சையுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்துடன் கருப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது.
டீயூப்லெஸ் டயர்
ஷைன் 100 தற்பொழுது டீயூப் டயருடன் கிடைத்து வரும் நிலையில் ட்யூப்லெஸ் டயரை DX மாடல் பெற்றிருப்பது முக்கிய ஒரு மாற்றமாகும். இதற்கு அடுத்தப்படியாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் இரண்டும் டிரம் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டர்
லிவோ 110, ஷைன் 125 போன்றவற்றில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரை சைன் 100டிஎக்ஸில் கொடுக்கப்பட்டு நிகழ்நேர மைலேஜ், எரிபொருள் இருப்பில் கிடைக்கின்ற தொலைவு மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் மேலும் புதிதாக சைடு ஸ்டாண்டு கட் ஆஃப் சுவிட்சு கூடுதல் பாதுகாப்பை தருகின்றது.
பெட்ரோல் டேங்க்
103 கிலோ எடை கொண்டுள்ள ஷைன் 100 டிஎக்ஸில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷைன் 100 அடிப்படையில் 9 பெட்ரோல் டேங்க் பெற்று 99 கிலோ எடை கொண்டுள்ளது. மற்றபடி, சஸ்பென்ஷன் உட்பட ஹெட்லைட் என அனைத்தும் ஒரே மாதியாக பகிர்ந்து கொள்ளுகின்றது.
தற்பொழுது விற்பனையில் உள்ள ஹோண்டாவின் ஷைன் 100 விலை ரூ.70,589 ஆக உள்ளது. ஷைன் 100 டிஎக்ஸ் விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.