இந்தியாவின் 100சிசி பைக் சந்தையை கடந்து பிரீமியம் வசதிகள் மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் என பலவற்றை பெற்று மிக வேகமாக வளர்ந்து வருகின்ற 125cc மோட்டார்சைக்கிள் சந்தையில் எந்த நிறுவனத்தின் பைக்கினை வாங்கலாம் என்பதனை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஹோண்டா மாதந்தோறும் 125சிசி சந்தையில் 1.25 லட்சத்துக்கும் கூடுதலான பைக்குகளை விற்பனை செய்து நாட்டின் முன்னணி தயாரிப்பாளராக இந்த பிரிவில் விளங்குகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஷைன் 125 மிகவும் நம்பகமான எஞ்சினுடன் சிறந்த மைலேஜ் பெற்றுள்ள நிலையில், எஸ்பி 125 ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் உடன் சிறந்த மைலேஜ் மற்றும் வசதிகள் என இரண்டு மாடல்களும் மிக நம்பகமான மதிப்பீட்டை இந்தியளவில் வென்றெடுத்துள்ளது.
புதிதாக வந்துள்ள அப்சைடு டவுன் ஃபோர்க், ஏபிஎஸ் , டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் சிபி 125 ஹார்னெட் மிகவும் பிரீமியம் ஸ்போர்ட்டிவ் வசதிகளை பெற்றுள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பிராண்டினை 125சிசி சந்தையில் வெளியிட்ட பின்னர் நாட்டின் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பல்சர் 125 ரெட்ரோ ஸ்டைலுடன் சற்று பவர்ஃபுல்லாகவும் விளங்கும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுக்கு பல்சர் NS125 , நவீன ஸ்டைலுக்கு பல்சர் N125 என மூன்று மாடல்களுடன், மிக முக்கியமாக ஏபிஎஸ் பெற்ற பல்சர் என்எஸ் 125 பிரீமியம் பைக்குகளுக்கு இணையான தோற்றம் நான்கு வால்வுகளை பெற்ற எஞ்சின் என இளையோர் விரும்பும் மாடலாக உள்ளது.
அடுத்து, 125சிசி சந்தையில் புதுமையான முயற்சியாக பஜாஜின் சிஎன்ஜி பைக் ஃப்ரீடம் 125 அதிக மைலேஜ் தரும் மாடலாக உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் முன்பு 125சிசி சந்தையில் முதன்மையாக இருந்தது, தற்பொழுது இந்நிறுவனம் 60,000க்கு கூடுதலான பைக்குகளை மாதந்தோறும் விற்பனை செய்து வரும் நிலையில் சூப்பர் ஸ்பிளெண்டர் நல்ல மைலேஜ் தருவதுடன் நன்மதிப்பை கொண்டுள்ளது. அடுத்து கிளாமர் இந்தியாவின் அதிகம் விரும்பும் மாடல்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக சரிவை சந்தித்து வருகின்றது. தற்பொழுது மீண்டும் X கிளாமருக்கு ஹீரோ பல்வேறு அதிநவீன வசதிகளை சேர்த்து பிரீமியம் ஸ்டைலுடன் க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடு என பலவற்றை வழங்கியுள்ளது.
ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் ஸ்பிளிட சீட், சிங்கிள் சீட் ஏபிஎஸ் பெற்ற முதல் 125சிசி மாடலாக இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் சிறந்த மைலேஜ் உடன் கிடைக்கின்றது.
இறுதியாக, டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125 ஒற்றை மாடல் டிரம் பிரேக் முதல் டிஸ்க் வரை பல்வேறு மாறுபட்ட வேரியண்டுகளில் எல்இடி ஹெட்லைட், நவீனத்துவமான வசதிகள், ஸ்போர்டிவ் அமைப்பு என பலவற்றை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த பிரிவில் டிஜிட்டல் கிளஸ்ட்டர், ரைடிங் மோடு உள்ளிட்ட அம்சங்களை முதலில் பெற்றதாக அமைந்துள்ளது.
எந்த 125சிசி பைக் வாங்கலாம்.?
🛠️ தேவைகள் | ✅ பரிந்துரைக்கப்படும் மாடல்கள் |
---|---|
அதிக மைலேஜ் தேவை | ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹீரோ கிளாமர், ஃபீரிடம் 125 CNG, ஹோண்டா SP125, பஜாஜ் பல்சர் 125 |
நவீன வசதிகள் | ஹீரோ கிளாமர் X (Cruise Control), டிவிஎஸ் ரைடர் 125 (Digital Cluster), ஹோண்டா CB 125 ஹார்னெட் |
ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் | ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா CB 125 ஹார்னெட், பஜாஜ் பல்சர் NS125, ஹோண்டா SP125, பஜாஜ் பல்சர் N125 |
பெர்ஃபாமென்ஸ் ரைடர்கள் | பஜாஜ் பல்சர் NS125, ஹோண்டா CB 125 ஹார்னெட், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா SP125, பஜாஜ் பல்சர் N125 |
நெடுஞ்சாலை பயணம் | ஹோண்டா SP125, பஜாஜ் பல்சர் NS125, ஹீரோ கிளாமர் X, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா CB 125 ஹார்னெட், டிவிஎஸ் ரைடர் 125 |
சிட்டி பயணங்கள் | டிவிஎஸ் ரைடர் 125, பஜாஜ் பல்சர் N125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் X, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் 125 |
பாதுகாப்பு (ABS உடன்) | ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா CB 125 ஹார்னெட், பஜாஜ் பல்சர் NS125 |
- அதிக மைலேஜ் தேவைக்கு
- ஹோண்டா ஷைன் 125
- ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்
- ஹீரோ கிளாமர்
- ஃபீரிடம் 125 சிஎன்ஜி
- ஹோண்டா எஸ்பி125
- பஜாஜ் பல்சர் 125
- நவீன வசதிகள்
- ஹீரோ கிளாமர் X
- டிவிஎஸ் ரைடர் 125
- CB 125 ஹார்னெட்
- ஸ்போர்ட்டிவ் ஸ்டைல்
- எக்ஸ்ட்ரீம் 125R,
- CB 125 ஹார்னெட்
- பஜாஜ் பல்சர் NS125
- ஹோண்டா SP 125,
- பல்சர் N125
- பெர்ஃபாமென்ஸ் ரைடர்கள்
- பஜாஜ் பல்சர் NS125
- CB 125 ஹார்னெட்
- எக்ஸ்ட்ரீம் 125R
- ஹோண்டா SP 125
- பஜாஜ் பல்சர் N125
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப
- அதிக நெடுஞ்சாலை பயணம் –
- ஹோண்டா SP 125
- பல்சர் NS125
- ஹீரோ கிளாமர் X
- எக்ஸ்ட்ரீம் 125R
- CB 125 ஹார்னெட்
- டிவிஎஸ் ரைடர்
- சிட்டி பயணங்கள்
- டிவிஎஸ் ரைடர் 125
- பல்சர் N125
- எக்ஸ்ட்ரீம் 125R
- ஹோண்டா எஸ்பி125
- கிளாமர் எக்ஸ்
- சூப்பர் ஸ்ப்ளெண்டர்
- ஷைன் 125
பாதுகாப்பான ஏபிஎஸ்
- எக்ஸ்ட்ரீம் 125ஆர்
- சிபி 125 ஹார்னெட்
- பல்சர் என்எஸ் 125
பட்ஜெட் விலையில் எந்த மாடல் வாங்குவது ?
குறிப்பாக 125சிசி பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை சராசரியாக ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் போன்றவை ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரையும், கிளாமர் எக்ஸ், டிவிஎஸ் ரைடர், பல்சர் 125, பல்சர் என்125, ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்றவை ரூ.1.10 முதல் ரூ.1.25 லட்சத்தில் கிடைக்கின்றது. அடுத்தப்படியாக, பல்சர் என்எஸ் 125, சிபி ஹார்னெட் 125 பைக்குகள் ரூ.1.35 லட்சத்துக்குள் கிடைக்கின்றது.
மேலே நான் குறிப்பிட்டுள்ள பரிந்துரை நான் பெற்ற அனுபவங்களில் இருந்தும் வரிசைப்படுத்தியுள்ளேன். ஸ்போர்ட்டிவ் மற்றும் மைலேஜ் என இரு முக்கிய பிரிவுகளை கருத்தில் கொண்டும் நவீன வசதிகளை பெறுவது என ஒவ்வொரு மாடலுக்கு தனியான சிறப்புகள் உள்ளது.
எடிட்டரின் கருத்து –
125சிசி சந்தை வழக்கமான தினசரி பயன்பாடுகளுக்கான கம்யூட்டர் என்பதனை தாண்டி ஸ்போர்ட்டிவ் ஸ்டைல், நவீன வசதிகள், க்ரூஸ் கண்ட்ரோல் , ரைடிங் மோடு, ஏபிஎஸ் என பலவற்றை பெரும் வெறும் தினசரி பயன்பாடுகளை கடந்து தினமும் சில நூறு கிலோமீட்டர் பயணிக்கவும் 125சிசி பைக்குகள் மைலேஜ் உடன் அதிக சிரத்தை இல்லாத ரைடிங்கிற்கு தேவைப்படுகின்றது.
கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் உங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான இரண்டு முதல் நான்கு மாடல்களை தேர்வு செய்து டீலர்களிடம் அனுகி சில கிலோமீட்டர் டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை பெற்று பின்னர் தேர்வு செய்யும் பொழுது உங்களின் அருகாமையிலே எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் உற்ற நண்பனாக மோட்டார்சைக்கிள் இருக்கும்.