சூப்பர் ஸ்குவாடு எடிசன் என்ற பெயரில் டிவிஎஸ் தொடர்ந்து பிரசத்தி பெற்ற நாயகர்களின் டிசைனை வெளிப்படுத்தும் ரைடர் 125 மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்பொழுது டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனை பெற்ற மாடலை ரூ.1,01,605 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் ரைடர் 125 பைக்கின் விலை ரூ. 90,913 முதல் ரூ.1,05,513 வரை அமைந்துள்ளது.
ஏற்கனவே SSE வேரியண்டில் பிளாக் பேந்தர் மற்றும் ஐயன்மேன் என இரண்டும் உள்ள நிலையில் கூடுதலாக வந்துள்ள மற்ற மார்வெல் கதாநாயகர்களான டெட்பூல் மற்றும் வால்வெரின் டிசைனை பெற்றதாக அமைந்து, மற்றபடி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் iGO அசிஸ்ட் பூஸ்ட் பயன்முறை, குறைந்த வேகத்தில் பயணிக்கும் பொழுது கியர் ஷி்பட் கையாளுதலுக்கு GTT (Glide Through Technology) மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் ஆகியவற்றுடன் உதவுகிறது. தொழில்நுட்பம் அனுபவத்திற்காக ரைடரில் 85 க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட ரிவர்ஸ் LCD கிளஸ்டரையும் பெற்றுள்ளது.
124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக 125சிசி சந்தையில் உள்ள ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்125 உட்பட கிளாமர் எக்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றது.