2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஏதெர் 450 ஏபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கண்ட்ரோல் வரவுள்ள மாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே 450 ஏபெக்ஸ் பயன்படுத்தி வருபவர்கள் OTA மூலம் அப்டேட் வழங்கப்படுகின்றது.
இன்ஃபினைட் க்ரூஸ் என ஏதெர் எனர்ஜி பெயர் வைத்துள்ள நிலையில் CityCruise, Hill Control, மற்றும் Crawl Control என் மூன்று விதமான முறையில் வழங்குகின்றது.
சிட்டி க்ரூஸ் எனப்படும் முறையில் நகரங்களுக்கு ஏற்ற வேகம் மட்டுமல்லாமல் நெஞ்சாலைகளில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கவும் க்ரூஸ் கட்டுப்பாடு எவ்விதமான இடையூறு இன்றி பயணிக்க உதவுகின்றது. ரைடர் பிரேக் போடும்போது அல்லது வேகத்தை மாற்றும்போது துண்டிக்காமல், புதிய வேகத்திற்கு தடையின்றி மாற்றியமைக்கிறது.
ஹில் கன்ட்ரோல் முறை இறங்கும் பொழுது அல்லது மேல்நோக்கி ஏறுவதற்கு துல்லியமான பயணத்தை வழங்குவதுடன், கீழ்நோக்கி இறங்குதல்களுக்கு மேஜிக் பிரேக்கிங் (மேஜிக் ட்விஸ்ட்) பயன்படுத்துகிறது, எவ்விதமான தலையீடு இல்லாமல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் நிலையான வேகத்தை பராமரிக்கிறது.
க்ராவல் கன்ட்ரோல் எனப்படுவது கரடுமுரடான அல்லது சீரற்ற சாலைகளில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மென்மையான குறைந்த வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது. ஈரமான அல்லது வழுக்கும் பரப்புகளில் ஸ்டெபிளிட்டி வழங்க மல்டிமோட் டிராக்ஷன் கன்ட்ரோலுடன் க்ரால் கன்ட்ரோல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
டாப் 3.7 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கிமீ தூரம் செல்லும் என சான்றிதழ் பெற்றுள்ளது. பவர் 7 kW (9.39 bhp) மற்றும் 26 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் Wrap+ ரைடிங் மோடினை பயன்படுத்தினால் 100 kmph வேகத்தை எட்ட உதவுகிறது.
கூடுதலாக குரல் வழி கட்டுப்பாடு மூலம் வசதியை இயக்குவது, கிரிக்கெட் விபரங்களை டேஸ்போர்டில் அறியும் வசதிகளை பெற்று 2025 ஏதெர் 450 ஏபெக்ஸ் விலை ரூ.1.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில்
ஏதெரின் க்ம்யூனிட்டி தினத்தில் EL01 கான்செப்ட், Redux, ரிஸ்டா ஸ்கூட்டர் மேம்பாடு ஆகியவற்றுடன் விரைவு சார்ஜிங் ஆப்ஷனை அறிவித்துள்ளது.