மேம்படுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டின் குறைந்த விலை க்ரூஸர் ரக மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ. 1,95,762 முதல் ரூ.2,15,883 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2025 மீட்டியோரில் 7 விதமான நிறங்களுடன் LED ஹெட்லேம்ப், டிரிப்பர் பாட் நேவிகேஷன், LED டர்ன் இண்டிகேட்டர்கள், USB டைப்-சி ஃபாஸ்ட்-சார்ஜிங் போர்ட் மற்றும் அட்ஜெஸ்ட் லீவர்கள் உள்ளன.
ஃபயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வகைகளிலும் தற்பொழுது LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டிரிப்பர் பாட் ஆகியவற்றை தரநிலையாகப் பெறுகின்றன, அதே நேரத்தில் மீடியோர் 350 சூப்பர்நோவா மற்றும் அரோரா வகைகள் அட்ஜெஸ்டபிள் லீவர்களுடன் வந்துள்ளது.
| Variant | Colourway | Price in INR (with revised GST @ 18%) |
|---|---|---|
| Fireball | Fireball Orange & Fireball Grey | INR 1,95,762 |
| Stellar | Stellar Matt Grey & Stellar Marine Blue | INR 2,03,419 INR 1,99,990 (Kerala only) |
| Aurora | Aurora Retro Green & Aurora Red | INR 2,06,290 |
| Supernova | Supernova Black | INR 2,15,883 |
முன்பாக கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட J-சீரிஸ் 350சிசி என்ஜின் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றதை போல தற்பொழுது மீட்டியோர் 350 மேம்படுத்தப்பட்ட 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, 4,000Rpm-ல் 27 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் இப்போது அதன் மோட்டார் சைக்கிள்களுக்கு 7 ஆண்டுகள் வரை சாலையோர உதவியுடன் விரிவான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது, இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி மூலம் கூடுதலாக 4 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ (எது முந்தையதோ அது) நிலையான 3 ஆண்டுகள் / 30,000 கிமீ உத்தரவாதத்தை விட அதிகமாக உள்ளது.

