
பஜாஜின் பிரசத்தி பெற்ற பல்சர் 220F செமி ஃபேரிங் பைக்கில் சில முக்கிய பாடி கிராபிக்ஸ், நிற மாற்றங்களுடன் கூடுதலாக மிக முக்கியமான பாதுகாப்பு சார்ந்த டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1,28,608 ஆக (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 Bajaj Pulsar 220F
பஜாஜ் இந்த பைக் வெளியிட்ட 2007 முதல் தற்பொழுது வரை பெரிய அளவிலான டிசைன் மாற்றங்களை இல்லாமல் சிறிய நிறம் மற்றும் பாடி கிராபிக்ஸ் மாற்றங்கள் மட்டுமே பெற்று வரும் நிலையில் இந்த முறையும் சிறிய மாற்றங்களுடன் பாதுகாப்பு சார்ந்தவற்றில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான அதே 220cc, ஆயில்-கூல்டு என்ஜினை பெற்று 20.4 HP பவர் மற்றும் 18.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் தொடர்ந்து 90/90 – 17 முன்புறத்தில் டயருடன் 120/80 – 17 பின்புறத்தில் வழங்கப்பட்டு முன்பக்கம் 280 மிமீ டிஸ்குடன், பின்புறத்தில் 230 டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
புரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்பிளிட் சீட் அமைப்பு, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி போன்றவை அப்படியே தொடர்கின்றன. இதன் மூலம் மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றிய அறிவிப்புகளைப் பெற முடியும்.
பழைய மாடலை விடச் சற்று விலை கூடுதலாக இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் புதிய தோற்றத்திற்காக சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த பைக்கில் க்ரீன் லைட் காப்பர், பிளாக் செர்ரி ரெட், பிளாக் இன்க் ப்ளூ மற்றும் பிளாக் காப்பர் பீஜ் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.






