இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற R15 ஃபேரிங் ஸ்டைலை போல புதிய 200cc என்ஜின் பெற்ற YZF-R2 வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில், இந்திய சந்தையில் ‘YZF-R2 என்ற பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் அறிமுகம் செய்வதற்கான முதற்படி என்பதை மட்டும் உறுதி செய்கிறது, மெக்கானிக்கல் அல்லது விற்பனை திட்டம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமாக இல்லை.
யமஹாவின் ஆர்-சீரிஸ் பைக்குகள் என்றாலே அவற்றின் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தும் வகையிலான ஏரோடைனமிக்ஸ் டிசைனுடன், இந்த புதிய ஆர்2 மாடலிலும் நவீன வடிவமைப்பு, குறைந்த எடை டெல்டாபாக்ஸ் சேஸ் மற்றும் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையிலான என்ஜின் செயல்திறன் ஆகியவை இருக்கும் என்று நம்பப்படுகிறது. தினசரிப் பயன்பாட்டிற்கும், வார இறுதிப் பயணங்களுக்கும் ஏற்ற ஒரு சமச்சீரான பைக்கை விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக அமையும்.
ஹீரோ கரீஷ்மா 210R, கேடிஎம் ஆர்சி 200, பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 மற்றும் சுஸுகி ஜிக்சர் எஸ்எஃப் 250 ஆகியற்றை எதிர்கொள்ள உள்ளது.
தற்போதைக்கு டிரேட்மார்க் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதால், இன்ஜின் விவரங்கள், விலை அல்லது அறிமுக தேதி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் யமஹா இன்னும் வெளியிடவில்லை.

