Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

by நிவின் கார்த்தி
19 December 2025, 7:18 am
in Car News
0
ShareTweetSend

upcoming nissan india

மேக்னைட் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற நிலையில் நிசான் இந்திய சந்தையில் கிராவைட், டெக்டான் மற்றும் 7 இருக்கை கொண்ட டெக்டான் என மூன்று மாடல்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சென்னையின் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

Nissan Gravite

ட்ரைபரின் நிசான் மாடலாக வரவிருக்கின்ற 7 இருக்கை  கொண்ட பட்ஜெட் விலை கிராவைட் காம்பேக்ட் எம்பிவி மாடலை ஜனவரி 2026ல் உற்பத்தி நிலை மாடல் வெளியிடப்பட்டு விலை மார்ச் 2026ல் அறிவிக்கப்பட்டு டெலிவரி மார்ச் முதல் துவங்க உள்ளது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு 5-வேக மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் விலை ரூ.6 முதல் 9 லட்சத்திற்குள் கிடைக்க உள்ளது.

Nissan Tekton

5 இருக்கை டஸ்ட்டர் அடிப்படையிலான 5 இருக்கை டெக்டான் எஸ்யூவி பிப்ரவரி 2026ல் வெளியிடப்பட்டு அதனை தொடர்ந்து விற்பனைக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள டீலர்களிடம் கிடைக்க துவங்கலாம். டெக்டானில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும் என்று தெரிகிறது. இது ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா, எலிவேட், விக்டோரிஸ் மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிரபல நடுத்தர எஸ்யூவி கார்களுக்குக் கடும் போட்டியாக அமையும்.

Nissan 7-Seater Tekton

டெக்டானின் அடிப்படையிலான 7 இருக்கை கொண்ட எஸ்யூவி ஏற்கனவே சந்தையில் உள்ள போரியல் போல அமைந்திருக்க உள்ள இந்த மாடல் 2026 இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹைபிரிட் சார்ந்த பவர்டிரையின் ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது.

மேலும், நிசான் நிறுவனம் தனது டீலர்களின் எண்ணிக்கையை 150-லிருந்து 250-க்கும் மேலாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

Related Motor News

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

Tags: Nissan GraviteNissan Tekton
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan