Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

by MR.Durai
9 May 2026, 6:36 am
in Car News
0
ShareTweetSend

இந்தியச் சாலைகளில் பாதுகாப்பிற்கும் கம்பீரத்திற்கும் பெயர் பெற்ற டாடா நெக்ஸான், நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டை மனதில் வைத்து ஒரு புதிய மைல்கல்லாக ரூ.10 லட்சத்திற்க்கும் குறைந்த விலையில் பனாரேமிக் சன்ரூஃப் கொண்ட வேரியண்டடை நெக்ஸான் வரிசையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பியூர் பிஎஸ்’ (Nexon Pure PS) வேரியண்ட், 9.59 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் அமைந்துள்ளது.

tata nexon pure plus ps

Tata Nexon Pure+ PS

அடிப்படை வேரியண்டில் கூட, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஐசோஃபிக்ஸ் (ISOFIX) சைல்டு சீட் மவுண்ட்கள் போன்ற அம்சங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.  தனது குடும்பத்தை அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பு உணர்வுதான் ஒரு காரின் மிகப்பெரிய வெற்றியாகவும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை ஏற்கனவே பெற்றுள்ள நெக்ஸான் கட்டமைப்பில், இவ்வளவு குறைவான விலையில் இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இந்த மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 120 பிஹச்பி ஆற்றலையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் வருகின்றது. இதுதவிர, டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

எல்இடி டிஆர்எல் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் காரின் பிரீமியம் தோற்றத்தைத் தக்கவைக்கின்றன. உட்புறத்தில் வசதியான இருக்கைகள் மற்றும் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் (Eco, City, Sport) வழங்கப்பட்டுள்ளன.

மற்றபடி, குறிப்பிடதக்க வசதிகளில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் (குறைந்த அம்சங்கள் கொண்ட Pure+ S டிரிம்மை விட 2 அதிகம்), க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பவர்டு வெளிப்புற ரியர்வியூ மிரர்கள் (ORVMs). மேலும், ஆட்டோமேட்டிக் LED ஹெட்லைட்கள், சென்சார்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்களும் உள்ளன.

Tata Nexon Pure+ PS Price list

  • பெட்ரோல் MT- ரூ. 9.59 லட்சம்
  • பெட்ரோல் AMT- ரூ. 10.14 லட்சம்
  • சிஎன்ஜி MT – ரூ. 10.39 லட்சம்
  • டீசல் MT – ரூ. 10.54 லட்சம்
  • டீசல் AMT – ரூ. 11.19 லட்சம்

tata nexon pure plus ps new

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன்களை வழங்கும் ஒரே எஸ்யூவி என்ற வகையில், நெக்ஸான் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் தனது கவர்ச்சியையும் வலுப்படுத்தி வருகிறது. ஒரு சராசரி இந்தியக் குடும்பம் தங்களின் முதல் காரை வாங்கும்போது பார்க்கும் அந்தப் பாதுகாப்பு மற்றும் நவீனத் தோற்றம் ஆகிய இரண்டையும், கட்டுப்படியாகக்கூடிய விலையில் டாடா மோட்டார்ஸ் இந்த முறை மிகச் சரியாக வழங்கியுள்ளது.

Related Motor News

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

Tags: Tata Nexon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan