Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

24.7 கிமீ மைலேஜூடன் ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா XUV 3XO ZNG அறிமுகம்

by MR.Durai
15 October 2026, 8:47 pm
in Car News
0
ShareTweetSend

Mahindra XUV 3XO cng

காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் ஏற்கனவே தனது அதிரடியான டிசைன் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள மஹிந்திரா நிறுவனம், தற்போது XUV 3XO CNG மாடலை அதிகாரப்பூர்வமாக ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் (EV) வடிவங்களில் விற்பனையாகி வரும் XUV 3XO, தற்போது CNG பிரிவிலும் இணைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வை வழங்குகிறது. இந்தப் புதிய CNG மாடலுக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி வரும் அக்டோபர் 20, 2026 முதல் தொடங்குகிறது.

1.2 லிட்டர் MPFI டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டர்போசார்ஜர் மற்றும் துல்லியமான ECU மேப்பிங் காரணமாக, பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு மோடுகளிலுமே சற்றும் குறையாமல் 111 hp பவரையும், 200 Nm டார்க்கையும் இந்த இன்ஜின் வெளிப்படுத்துகிறது.

இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிலோ CNG-க்கு 24.7 km/kg மைலேஜ் தரும் என மஹிந்திரா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த காரில் CNG அளவு குறையும்போது, ஓட்டுநருக்கு எந்தச் சிரமமும் இன்றி தானாகவே பெட்ரோல் மோடுக்கு (Auto-switch to Petrol) மாறிக்கொள்ளும் நவீன வசதியும் இதில் உள்ளது.

CNG கார்கள் என்றாலே பூட் ஸ்பேஸ் சுத்தமாக இருக்காது என்ற கவலையைப் போக்கும் வகையில் மஹிந்திரா இதில் ‘டூயல்-டேங்க்’ எனப்படும் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கியில் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் தாராளமாகக் கிடைக்கிறது. மேலும், ஸ்பேர் வீல் காரின் அடிப்பகுதியில் (Under-body mounted) பொருத்தப்பட்டுள்ளதால், நீண்ட தூரக் குடும்பப் பயணங்களின்போது லக்கேஜ்களை வைப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது.

XUV 3XO மாடலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பின்பக்க டெயில்கேட்டில் இடம்பெற்றுள்ள ‘ZNG’ பேட்ஜ் மட்டுமே இது ஒரு CNG கார் என்பதை அடையாளப்படுத்துகிறது.

எக்ஸ்-ஷோரூம் விலைப் பட்டியல்

  • MX Edge – ரூ. 9.99 லட்சம்
  • RevX Edge (O) – ரூ. 10.79 லட்சம்
  • AX5 – ரூ. 11.19 லட்சம்
  • RevX A – ரூ. 12.27 லட்சம்

Related Motor News

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

3% மஹிந்திரா எஸ்யூவி மற்றும் வர்த்தக வாகனங்கள் விலை உயருகிறது.!

பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் மூன்று கார்கள்.!

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

Tags: Mahindra XUV 3XO
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan