Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிஜிட்டல் லைட் டெக்னாலாஜி அறிமுகம் : மெர்சிடிஸ் பென்ஸ்

by MR.Durai
5 December 2016, 12:55 pm
in Auto News, Wired
0
ShareTweetSend

சொகுசு கார் தயாரிப்பாளாரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தங்களுடைய எதிர்கால கார்களில் பயன்படுத்த உள்ள அதிநவீன டிஜிட்டல் லைட் டெக்னாலாஜி என்ற பெயரில் முகப்பு விளக்கினை அறிமுகம் செய்துள்ளது.

ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் போல லேசர் நுட்பத்திலான ஹெட்லேம்ப் விளக்கினை பயன்படுத்தாமல் மிகவும் தனித்துவமான அதிநவீன செயல்திறன் கொண்ட இந்த விளக்கினை மைக்ரோமிரர்ஸ் என்ற பெயரில் முதன்முறையாக எஃப்105 கான்செப்ட் மாடலில் அறிமுகம் செய்தது.

டிஜிட்டல் லைட் சிறப்புகள்

ஒவ்வொரு ஹெட்லைட்டில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மிகச்சிறிய மிரர் பயன்படுத்தப்பட்டு அதனுடன் இணைந்த கேமரா மற்றும் ரேடார் சென்சார் ஆகியவை உதவியுடன் சூழ்நிலைக்கு ஏற்ப மிக சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள மென்பொருள் உதவியுடன் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசாமல் இருக்கும் வகையில் செயல்படும்.

இந்த ஹெட்லைட் நுட்பத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு அம்சம் 4 விளக்கு புள்ளிகளை பெற்றுள்ள இதில் ஒவ்வொரு விளக்கிலும் 1024 எல்இடி சிப்கள் இடம்பெற்றிருக்கும் என்பதனால் ஒரு மகிழுந்தின் இருபக்க முகப்புவிளக்கிலும் சேர்த்து மொத்தம் 8192 எல்இடி சிப்கள் பெற்றிருக்கும்.  சாலைகளில் இடம்பெற்றுள்ள எச்சரிக்கை சின்னங்கள் , பாதசாரிகள் என அனைத்தும் மிக சிறப்பான முறையில் தெளிவாக வாகன ஓட்டிக்கு தெரியும் வகையில் ஒளிரும் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் டிஜிட்டல் லைட் டெக்னாலாஜி அமைந்திருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் டிஜிட்டல் லைட் நுட்பத்தினை விரைவில் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் கொண்டு வரவுள்ளது. டிஜிட்டல்லைட் டெக்னாலஜியில் இடம்பெற்றுள்ள மிக சிறப்பான நுட்பம் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் டிஜிட்டல் லைட் படங்கள்

 

Related Motor News

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan