Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

by MR.Durai
24 July 2026, 6:56 am
in Auto News
0
ShareTweetSend

force urbania dx launched

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அர்பேனியா டீலக்ஸ் (Urbania Deluxe) வேனை விற்பனைக்கு ரூ. 28.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் என்ஜினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய அர்பேனியா மாடலுக்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய ‘டீலக்ஸ்’ பதிப்பு, அதிக பவர் கொண்ட இன்ஜின், உயர்தர கேபின் வசதிகள் மற்றும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களுடன் சுற்றுலா அமைப்பாளர்கள், ஹோட்டல் டிரான்ஸ்ஃபர், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் பயணம் மற்றும் சொகுசு வேன் வாடகை சேவைகளுக்கு ஏற்ற வகையில் 3 விதமான வீல்பேஸ் அளவுகளில், 3,350 மிமீ, 3,615 மிமீ மற்றும் 4,400 மிமீ அளவுகளில் கிடைப்பதுடன், 9+D, 10+D, 12+D, 13+D மற்றும் 16+D போன்ற பல இருக்கை அமைப்புகளில் (Seating Layouts) கிடைக்கிறது.

புதிய அர்பேனியா டீலக்ஸில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் உருவான 2.6-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் தற்போது அதிகபட்சமாக 134 hp பவரையும், 350 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுவதுமாக பயணிகள் மற்றும் லக்கேஜ்களுடன் பயணிக்கும் போது கூட, உடனடி பிக்கப் மற்றும் மென்மையான டிரைவிங் அனுபவத்தை இது உறுதி செய்கிறது.

வெளிப்புற தோற்றத்தில் புதிய 16-இன்ச் அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், கேபினுக்குள் நுழைய வசதியாக பவர்-ஆப்பரேட்டட் ஸ்லைடிங் ஃபுட்ஸ்டெப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளே பிரீமியம் லெதரெட் இருக்கைகள், அதற்கேற்ற உள்கட்டமைப்பு டிசைன் மற்றும் மரத்தாலான வுட்-ஃபினிஷ் ஃப்ளோரிங் ஆகியவை ஃபர்ஸ்ட்-கிளாஸ் விமானப் பயண அனுபவத்தை நினைவுபடுத்துகின்றன.

பயணிகளின் பொழுதுபோக்கிற்காக கூகுள் மேப்ஸ் மற்றும் ரிவர்ஸ் கேமரா வசதி கொண்ட 9-இன்ச் HD டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுநருக்கான TFT டிஜிட்டல் கிளஸ்டர், 8-ஸ்பீக்கர் கொண்ட டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம் (DTS) மற்றும் அனைத்து வரிசை இருக்கைகளுக்கும் டைப்-A மற்றும் டைப்-C சார்ஜிங் போர்ட்கள் எனப் பல வசதிகள் நிறைந்துள்ளன.

force urbania deluxe launched

பாதுகாப்பைப் பொறுத்தவரை, கார்களில் இருப்பது போல அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், ஓட்டுநர் மற்றும் முன் பயணியருக்கான ஏர்பேக்குகள், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ABS மற்றும் EBD வசதிகளுடன் என்ஜின் டிராக் டார்க் கன்ட்ரோல் (ETDC) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ‘ஃபோர்ஸ் கேர்’ திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிமீ வாரண்டியும் அளிக்கப்படுவது வணிக ரீதியிலான உரிமையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது.

force urbania

Related Motor News

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

விரைவில் புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

5 டோர் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி டீசர் வெளியானது

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் டி1என் எலெக்ட்ரிக் வேன், ஸ்மார்ட் சிட்டி பஸ் அறிமுகம்

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி விற்பனைக்கு வெளியானது

போர்ஸ் மோட்டார்ஸ் டிராவலர்-மோனோபஸ் அறிமுகம்

Tags: Force MotorsForce Urbania DX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan