Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

போர்ஸ் மோட்டார்ஸ் டிராவலர்-மோனோபஸ் அறிமுகம்

by automobiletamilan
September 4, 2018
in கார் செய்திகள்

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், நாட்டின் ஒரே ஒரு 33/41 சீட்கள் கொண்ட மோனோகோக்யூ பஸ்-ஆன டிராவலர்-மோனோபஸ்-ஐ பெங்களூரில் நடந்த பஸ்வேர்ல்ட் 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்தது. டிராவலர்-மோனோபஸ், 115 HP/350Nm டார்க்யூ-வை கொண்டது. மெர்சிடைஸ் மூலம் பெறப்பட்ட 3.2 லிட்டர், பொதுவான ரயில் இன்ஜினையும் கொண்டுள்ளது.

இந்த பஸ்சின் உச்சபட்ச டார்க்யூவான 350Nm-ல் 1600 முதல் 2200 rpm கொண்டதாக இருக்கும். அதிக மற்றும் குறைந்த டார்க்யூகள், குறைந்த வேகத்திலும் ஸ்மூத்தாக வாகனத்தை ஒட்டி செல்ல உதவும். இந்த பஸ்கள், சிறந்த முறையில் ஆற்றல் மற்றும் எடை விகிதம் கொண்டது. இதே போன்ற பஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது இது 800kg எடையில் குறைவான எடை கொண்டதாகவே இருக்கும்.

இந்த பஸ் குறித்து பேசிய போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரசான் ஃபைரோடியா, இந்த பஸ்கள் முழுவதுமாக உள்நாட்டிலேயே, எங்கள் நிறுவத்தின் R&D குழுவினரால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்களில், சிறந்த செயல்திறன், வசதிகள், நம்பகத்தன்மை, ஆயுள் மற்றும் பாதுகாப்பு போன்றவை அதிகளவில் இருப்பதோடு, இந்த பஸ்கள் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், மோனோகோக்யு கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதில் பெரியளவில் அழுத்தம் கொண்ட பேணல்கள் உள்ளது. மேலும் இந்த பஸ்கள் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பங்களுக்கு உரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளோம் என்றார்.

அதிநவீன 5-வேகத்துடன் இணைந்து செயல்படும் கொண்ட கியர்பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரட்டை கூம்புகளுடன் இணைந்து செயல்படும் ரிங்குகள் உள்ளதால், உராய்வு மற்றும் மென்மையான டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. ஸ்பெஷல் கிளட்ச்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிறிய இடைவெளியில் இன்ஜினை ஸ்டார்ட்-ஸ்டாப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

டிராவலர்-மோனோபஸ் 33/41 சீட்கள் மோனோகோக்யூ உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அதிக உறுதியான பாடி மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மையுடன் இருக்கும். ஆறாவது தலைமுறை CED பெயிட்ன்டிங் பிராசசர்களுடன் கூடிய பாடியை கொண்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பிரிமியர் அப்ளிகேஷன், பஸ்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாப்பு மற்றும் அரிப்பு ஏற்படுவதையும் தடுக்க உதவும்.

இதுமட்டுமின்றி குறைந்த அளவு உயரம் கொண்ட படிகளை கொண்டுள்ளதால், எளிதாக பஸ்சின் உள்ளே செல்லவோ, வெளியே செல்லவோ இயலும். குறைந்த புவியிர்ப்பு திறனுடன் சிறந்த ரைடிங் திறன் கொண்டது, குறைவான NVH லெவல், சிறிய இடத்திலும் திருப்பும் வசதி கொண்டது. மேலும், பயணிக்க எளிதாகவும், வசதியான சீட்களுடன், 2.35m அகலம் கொண்ட உள்புற வடிவமைப்பையும், முழு அளவிலான உயர்த்தப்பட்ட உயரத்துடனும், பயணிகள் கால்களை வசதியாக வைத்து கொள்ள தேவையான இடங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் அழுத்தப்பட்ட ஸ்டீல் பேனல்களுடன் ஆட்டோமேட்டட் மற்றும் ரோபோடிக் சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags: Force Motorsஅறிமுகம்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version