ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய குர்கா எஸ்யூவி உட்பட டி1என் வேன் பிளாட்ஃபாரம், ஸ்மார்ட்சிட்டி பஸ் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் டி1என் பிளாட்ஃபாரம் எலெக்ட்ரிக் டிராவலர் மாடலாகவும் வரவுள்ளது.
T1N இயங்குதளம் உலகளாவிய சந்தைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியான் மற்றும் தென் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. T1N தளத்திற்கு ஐரோப்பா, கிழக்கு மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்ற அதிக பிரீமியம் சந்தை தயாரிப்புகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி1என் மாடலை பொறுத்தவரை மிகவும் சக்திவாய்ந்த பிஎஸ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்படும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்கும், அதேவேளை இந்த என்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷனும் வரவுள்ளது. இந்த இரண்டை தவிர அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் பயன்பாட்டு பவர் ட்ரெயின் ஆப்ஷனையும் பெற உள்ளது.
இந்த வேன் பிரிவில் டி 1 என் பல்வேறு பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெறும் முதல் வாகனம், ஓட்டுநர் மற்றும் இணை ஓட்டுநருக்கான ஏர்பேக்குகள் மற்றும் ரோல்ஓவர் ஆப்ஷனை வழங்குகிறது. கூடுதலாக, டி1என் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் ஏபிஎஸ், ஈபிடி மற்றும் ஈஎஸ்பி உடன் வருகிறது. இந்த தளம் இரண்டு பாக்ஸ் கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரிவில் முதல் முறையாக இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷனை பெறுகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்மார்ட் சிட்டி பஸ்
மும்பை போன்ற மிகவும் நெரிசல் மிகுந்த மெட்ரோ நகரங்களில் கடைசி தொலைவு வரை பயணிக்கும் நோக்கில் ஏசி வசதி பெற்ற 21 இருக்கை கொண்ட சிறிய பேருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.