Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா நெக்சான் ஏரோ எஸ்யூவி பாடி கிட்ஸ் விலை விபரம் வெளியானது

by MR.Durai
20 February 2018, 7:46 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் அறிமுகம் செய்திருந்த டாடா நெக்சான் எஸ்யூவி காரின் நெக்சான் ஏரோ கஸ்டமைஸ் பாடி கிட் விலை விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டாடா நெக்சான் ஏரோ

2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா நெக்சான் ஏரோ கான்செப்ட் மாடலை விரைவாக சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் அமைந்திருக்கின்றது.

ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. இதே எஞ்சினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஏரோ எடிசனில் 5 விதமான பாடி கிட்டுகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் தேர்வுகளை கொண்டு நெக்சான் எஸ்யூவி மாடலை விரும்பும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

XE/XM/XT/XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடி கிட்டுகளின் ஆரம்ப விலை ரூ.30,610/- தொடங்கி அதிகபட்சமாக ரூ. 61,574/- விலையில் வெளியிடப்பட்டு கூடுதலாக லேபர் கட்டணம் ரூ.7000 + ஜிஎஸ்டி வரி மற்றும் மேற்கூறை ரேப் விலை கூடுதலாக ரூ.3500 + ஜிஎஸ்டி வரி ஆகும்.

பாடி கிட்டுகளில்  XZ மற்றும் XZ+ ஆகிய வேரியன்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள ரூ. 61,574/- விலை கொண்ட ஏரோ கிட் லெவல் 3 ஆப்ஷன் 2யில் பாடி கிட், பனி விளக்கு கார்னிஷ், ஏரோ பேட்ஜ், ஏரோ சிட் கவர், ஏரோ கார்பெட், மிரர் கவர் சிவப்பு நிறத்தில் மற்றும் வீல் ரிம்பேன்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரத்தை படத்தில் காணலாம்

image source – mycarhelpline

Related Motor News

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

Tags: Tata MotorsTata NexonTata Nexon Aero
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan