Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ரூ.800 கோடி முதலீட்டை மேற்கொள்ளுகிறது

by MR.Durai
3 April 2018, 11:30 pm
in Auto Industry
0
ShareTweetSend

சர்வதேச அளவில் நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் (250-750 cc) சந்தையில், மிக சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிய நுட்பங்கள் மற்றும் மாடல்கள், வெளிநாடுகளில் ஆலையை அமைப்பதற்கு என மொத்தமாக ரூ. 800 கோடி முதலீட்டை என்ஃபீல்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் சிஇஓ சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு முதலீடு

2018-2019 ஆம் நிதி ஆண்டில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் , பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், குறிப்பாக சமீபத்தில் இந்நிறுவனம் சென்னை அருகே உள்ள வல்லம் வடகல் மூன்றாவது தொழிற்சாலையை தொடங்கியதை தொடர்ந்து இந்த ஆலையின் இரண்டவாது உற்பத்தி பிரிவினை கட்டமைக்க தொடங்கியுள்ளதால், இந்த பிரிவு முழுமையான உற்பத்தி திறனை எட்டும்போது , ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9.50 லட்சம் மோட்டார்சைக்கிள்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சென்னையில் இந்நிறுவனம் முழுமையான மற்றும் எதிர்கால தொழிற்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மையத்தை இந்த வருட இறுதிக்குள் கட்டமைக்க உள்ள நிலையில், கூடுதலாக இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐஷர் மோட்டார்ஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் கூறுகையில் எங்களது  மோட்டார்சைக்கிள் விநியோகத்தைத் தாண்டியும் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரிக்கின்றது, மேலும் எங்கள் எல்லா சந்தையிலிருந்தும் வலுவான வளர்ச்சியை தொடர்ந்து பார்க்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள வள்ளம் வடகல் ஆலையின் இரண்டாவது பிரிவினை கட்டமைத்து, நமது உற்பத்தி திறனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு சென்னையில் எங்கள் தொழில்நுட்ப மையத்தை கட்டி முடிப்போம், வரவிருக்கும் ஒழுங்குமுறைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய தயாரிப்புகளின் மேம்பாட்டில் மேலும் முதலீடு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களது புதிய தண்டர்பேர்டு X, கிளாசிக் கன்மெட்டல் பிரே. ஸ்டெல்த் பிளாக் மற்றும் ரெட்டிச் சீரீஸ் போன்றவை சிறப்பான ஆதரவை கொண்டு விளங்குகின்ற நிலையில், எங்களுடைய புதிய இரட்டையர்களான 650சிசி இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டினல் ஜிடி ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட நுட்பங்களை தொடர்ந்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Motor News

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் எடிஷனில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்

18 % வளர்ச்சி பெற்ற ராயல் என்ஃபீல்டு ஜூன் மாத விற்பனை நிலவரம்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர் மாடாலா இது ?

Tags: classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Road Accidents in 2022

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

ரூ.8.99 லட்சத்தில் டாடா நெக்ஸான் டர்போ சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்

மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan