Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைகிறது ஸ்கோடா கொடியாக் ஸ்டைல் விலை

by MR.Durai
14 November 2018, 10:49 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில், ஸ்கோடா நிறுவனம் தனது கொடியாக் ஸ்டைல் வகை கார்களுக்கான விலையை 1 லட்சம் வரை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஸ்கோடா கொடியாக் ஸ்டைல் கார்கள் என்ட்ரி-லெவல் வகை கார்கள் 33.84 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா சமீபத்தில் டாப்-ஸ்பெக் லாரின் & கிளமெண்ட் வகை கார்களை 35.99 லட்ச ரூபாய் விலையில் அறிமுகம் செய்தது. இந்த வகை கார்கள் பல வசதிகளுடன் ஸ்கோடா காரில் முதல் முறையாக ஸ்கோடாவின் கிளவர் வசதியுடன் வெளிவந்துள்ளது.

இந்த கார்கள் ஸ்டைல் மற்றும் லாரின் & கிளமெண்ட் என இரண்டு வகையாக வெளியாகியுள்ளது. என்ட்ரி லெவல் ஸ்கோடா கொடியாக் ஸ்டைல் கார்கள் சில உயர்ந்த தர வசதிகள், அதாவது முழு LED ஹெட்லேம்கள், LED பனிகால லேம்ப்கள் மற்றும் டைல் லைட்கள், டைல்-கேட் மற்றும் எலக்ட்ரானிக் முறையில் இயக்கக்கூடிய பனரோமாக் சன்ரூப் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி-க்கள் 18 இன்ச் டிரிண்டி அலாய் வீல்களை கொண்டிருக்கும். என்ட்ரி லெவல் ஸ்கோடா கொடியாக்கில், 3-வகையான கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், LED அம்பிஎன்ட் லைட்டிங், எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் சீட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது இதில் நேவிகேஷன் மற்றும் 10 ஸ்பீக்கர், 575 வாட் கான்டான் சவுண்ட் சிஸ்டம் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

7 சீட் கொண்ட கொடியாக் கார்கள், 4,697mm நீளமும், 1,882mm அகலம் மற்றும் 1,655mm உயரம் கொண்டதாக இருக்கும். இந்த கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 1,882mm ஆக இருக்கும். இந்த எஸ்யூவி-க்கள் குவார்ட்ஸ் கிரே, லாவா ப்ளூ, மேஜிக் பிளாக், மூன்பீம் ஒயிட் மற்றும் மேக்னடிக் பிரவுன் ( லாரின் & கிளமெண்ட் மட்டும்) என 5 கலர் ஆப்சன்களை கொண்டிருக்கும். என்ட்ரி லெவல் கார்களில் சில குறைகள் இருந்தபோதும், இதில் உயர்தரம் கொண்ட பாதுகாப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் 9 ஏர்பேக்ஸ், முன்புறமும், பின்புறமும் பார்க்டிரானிக் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, ஹேண்ட்ஸ்-ப்ரீ பார்க்கிங், ஆன்டி-சிலிப் ரெகுலேஷன், IBUZZ களைப்பு குறித்து எச்சரிக்கும் வசதி, எலக்ட்ரானிக் மாறுபாடு கொண்ட லாக், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை இடம் பெற்றுள்ளது.

ஸ்கோடா கொடியாக் ஸ்டைல் கார்கள், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 148bhp ஆற்றலுடன் 340Nm டார்க்யூவில் இயங்கும். மேலும் இந்த கார் 4-வீல் டிரைவ்வாக இருப்பதால் பவர் 7-ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூலம் பரப்பப்படும். ARAI சர்டிபிகேட் பெற்ற இந்த எஸ்யூவி-களின் எரிபொருள் எக்னாமி 16.5Kmpl ஆக இருக்கும்.

Related Motor News

No Content Available
Tags: Skoda Kodiaq Style
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan