Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்

By MR.Durai
Last updated: 16,June 2019
Share
SHARE

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

வரும் ஜூலை 9 ஆம் தேதி ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி மாடலின் ரூ.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் மின்சார எஸ்யூவி காராக விளங்க உள்ளது.

மின்சார கார்களுக்கான சந்தை இந்தியாவில் பரவலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம், மின்சார கார் விற்பனையில் முன்னணி வகித்து வருகின்றது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்

முழுமையாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஒருங்கினைக்கப்பட்டு (completely-knocked-down) முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக வருடத்திற்கு 500 எஸ்யூவி கார்களும், வரவேற்பினை பொறுத்து படிப்படியாக தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் இந்தியா திட்டமிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் 39 kW மற்றும் 69 kW என இரு விதமான பேட்டரி பேக்குகளை கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சந்தையில் முதற்கட்டமாக 39 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 312 கிமீ பயணிக்க உதவுவதுடன் 133bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  39.2kWh பேட்டரி கொண்ட மாடலின் முழுமையான சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதுமானதாகும்.

இந்த மாடலுக்கு என பிரத்தியேகமான சார்ஜிங் நிலையங்கள் டீலர்களிடமும், வாடிக்கையாளர் இல்லத்தில் உள்ள ஹோம் சார்ஜர் மூலமாகவும் சார்ஜிங் செய்யும் வசதியை ஹூண்டாய் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. குறைந்த விலை 39 கிலோவாட் கொண்ட பேட்டரியுடன் கூடிய மாடல் விற்பனைக்கு ரூபாய் 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Mahindra BE 6 Batman Edition
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்
TAGGED:Hyundai KonaHyundai Kona electric
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved