வரும் ஜூலை 9 ஆம் தேதி ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி மாடலின் ரூ.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் மின்சார எஸ்யூவி காராக விளங்க உள்ளது.
மின்சார கார்களுக்கான சந்தை இந்தியாவில் பரவலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம், மின்சார கார் விற்பனையில் முன்னணி வகித்து வருகின்றது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்
முழுமையாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஒருங்கினைக்கப்பட்டு (completely-knocked-down) முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக வருடத்திற்கு 500 எஸ்யூவி கார்களும், வரவேற்பினை பொறுத்து படிப்படியாக தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் இந்தியா திட்டமிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் 39 kW மற்றும் 69 kW என இரு விதமான பேட்டரி பேக்குகளை கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சந்தையில் முதற்கட்டமாக 39 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 312 கிமீ பயணிக்க உதவுவதுடன் 133bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39.2kWh பேட்டரி கொண்ட மாடலின் முழுமையான சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதுமானதாகும்.
இந்த மாடலுக்கு என பிரத்தியேகமான சார்ஜிங் நிலையங்கள் டீலர்களிடமும், வாடிக்கையாளர் இல்லத்தில் உள்ள ஹோம் சார்ஜர் மூலமாகவும் சார்ஜிங் செய்யும் வசதியை ஹூண்டாய் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. குறைந்த விலை 39 கிலோவாட் கொண்ட பேட்டரியுடன் கூடிய மாடல் விற்பனைக்கு ரூபாய் 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.